நண்பர்கள்தான்.. ஆனால் அதற்கு மட்டும் வாய்ப்பே கிடையாது!. அன்றே வெளிப்படையாக கூறிய அஜித்!..
தமிழ் சினிமாவில் இரட்டை ஜாம்பவான்களாக இருந்த எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி-கமல் இவர்கள் வரிசையில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டவர்கள் விஜய்- அஜித். இன்று இவர்கள் பேச்சுத்தான் இணையம் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. நாளைய தினம் இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு நேருக்க நேராக மோத இருக்கின்றனர்.
உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் ரசிகர்கள் இவர்களில் யார் வெற்றியை பதிவு செய்வார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஒருவருக்கொருவர் தனித்தனியாக நடித்த படங்களுக்கு இந்த அளவுக்கு போட்டி என்றால் இருவரும் சேர்ந்து நடித்தால் ரசிகர்களின் நிலைமை என்ன ஆகும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
இதையும் படிங்க : துணிவு படத்தில் இருந்து ஒதுங்கிய போனி கபூர்… சைலன்ட்டாக நுழைந்து வேலையை காட்டிய உதயநிதி… ஓஹோ இதுதான் விஷயமா!!
ஏற்கெனவே இருவரையும் வைத்து வெங்கட் பிரபு கண்டிப்பாக படம் எடுப்பேன் என்று கூறியிருந்தார். மேலும் இருவரும் இணைந்து ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் நடித்திருந்தார்கள். நேருக்கு நேர் படத்திலும் அஜித் நடித்திருக்கிறார். அவர் ஒரு சில காரணத்தால் விலகவே அதன் பிறகே சூர்யா இணைந்திருக்கிறார்.
இதை பற்றி முன்பே ஒரு பேட்டியில் அஜித் மிகத்தெளிவாக கூறியிருக்கிறார். அதாவது நானும் ஒரு படம் பண்றேன், மிஸ்டர் விஜயும் ஒரு படம் பண்ணுகிறார். இரு படங்களாலும் தனித்தனியாக 1000 குடும்பங்கள் வாழ்க்கை பெறும். அதுவே சேர்ந்து நடித்தால் அதில் சில பேரின் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருக்கிறது. அது வேண்டாம் என நினைக்கிறேன்.
மேலும் மல்டி ஸ்டார் படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. அதில் எனக்கு உடன்பாடு இல்லை. எங்கள் இருவருக்கும் தனித்தனியான மார்கெட் இருக்கிறது. அதற்கேற்றாற் போல நடந்துக்க வேண்டும். அதையும் மீறி நடித்தாலும் படத்தில் பாடல்கள் அமைவதில் சிக்கல் ஏற்படும். சில பாடல்கள் ஹிட் ஆகலாம்.
ஹிட் ஆகாத பாடல்களால் அது சம்பந்தப்பட்ட ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தரும். அதனால் பாலிடிக்ஸ் பிரச்சினைகள் வரும். அது வேண்டாம் என நினைக்கிறேன். ரசிகர்களுக்காக நடித்தாலும் நல்ல மாதிரியான கதை அமையவேண்டும். ரஜினி சார், கமல் சார் இருவரும் சேர்ந்து நிறைய படங்களில் நடித்திருக்கின்றனர். அந்த மாதிரியான கதைகள் யாருக்கும் இடைஞ்சல் இல்லாதவாறு அமையவேண்டும்.
எங்களுக்குள் போட்டி இருக்கிறது. ஆனால் அது ஆரோக்கியமான போட்டிதான். அது பர்ஷனலில் இல்லை. அடிப்படையிலேயே நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான் என்று அஜித் அந்த பேட்டியில்கூறியிருக்கிறார்.