விஜய்க்கும் பிரசாந்துக்கும் முட்டிக்கிச்சா!.. கோட் படத்தில் புது சிக்கல்.. பிரபலம் சொன்ன மேட்டர்!..
நடிகர் விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் டாப் ஸ்டார் பிரசாந்த் நடித்து வரும் நிலையில், இருவருக்கும் இடையே முட்டிக் கொண்டதாக செய்யாறு பாலு தனது புதிய வீடியோவில் பேசியுள்ளார்.
சினிமாவில் நடக்கும் பிரச்சனைகள் என பல விஷயங்களை பேசி வரும் செய்யாறு பாலு சியான் விக்ரமை காலி செய்ய பிரசாந்த் அப்பா முயற்சி செய்தது என பரவிய வதந்தியை எல்லாம் மறுத்து அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார். பிரசாந்தும் சியான் விக்ரமும் உறவினர்கள். சியான் விக்ரம் விபத்து ஒன்றில் சிக்கிய போது அவரை காப்பாற்றியதே நான் தான் அப்படியிருக்க நான் ஏன் என் உறவினர் பையனை காலி செய்ய நினைக்கப் போகிறேன் என கூறியிருந்தார்.
இதையும் படிங்க: குட்ட கவுன்ல கண்ணுக்கு குளுகுளுன்னு இருக்கு!.. ரசிகர்களை ஜில்லாக்கிய கேப்ரியல்லா…
ஒரு காலத்தில் டாப் ஸ்டார் பிரசாந்த் முன்னணி நடிகராக வலம் வந்த நிலையில், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தில் அவர் விஜய்க்கு பின்னாடி நின்று கொண்டு நடித்து வருவது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
திருநெல்வேலியில் விஜய் போலவே நலத்திட்ட உதவிகளை செய்ய வந்த பிரசாந்திடம் விஜய்யின் கோட் படத்தில் நடிப்பது பற்றி கேள்வி எழுப்பிய போது, விஜய்யுடன் இணைந்து நடிச்சிட்டு இருக்கேன் என்றே ஈகோவை விட்டுக் கொடுக்காமல் பிரசாந்த் பேசினார் என்றும் ஷூட்டிங் ஸ்பாட்டிலும் விஜய்க்கு இணையாக தனக்கு காட்சிகள் இருக்க வேண்டும் என வெங்கட் பிரபுவிடம் பிரசாந்த் மல்லுக்கட்டி வருவதாக செய்யாறு பாலு கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஆடியோ லாஞ்சுக்கு ஏன் வரது இல்ல!.. யோகி பாபு சொன்ன அடடே விளக்கம்!.. மத்தவங்களாம் நடிக்கலையா?..