
Cinema News
அப்பாவை இருக்க சொல்லுங்க நானே வரேன்.. அம்மாவுக்கு ஆர்டர் போட்ட விஜய்.?! உண்மை நிலவரம் இதோ…
தளபதி விஜய்யின் ஆரம்பகால திரைப்படங்களை அதிகமாக இயக்கியது. அதன் பிறகு தனது மகனுக்காக கதை கேட்டு தேர்வு செய்தது. தன் மகனை ஒரு மாஸ் ஹீரோவாக உருவெடுக்க செய்தது என ஒரு அப்பாவாக எஸ்.ஏ.சந்திரசேகரின் பங்கு அதிகம் தான்.
அதற்கும் மேலே, தன் மீதான விமர்சனங்களை எதிர்கொண்டு, தன்னை ஒவ்வொரு படத்திலும் மெருகேற்றி தற்போது முன்னனி நாயகன் என அந்தஸ்தை பெற்றுள்ளார் தளபதி விஜய்.
இப்படி ஒன்றாக இருந்த தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தளபதி விஜய்க்கு இடையே சில மனகசுப்புகள் நிகழ்ந்ததால் அவர்கள் இருவரும் தற்போது பேசி கொள்வதில்லை என்பது தான் தற்போதைய நிலவரமாக உள்ளது.
இதையும் படியுங்களேன் – ரசிகர்களை திருப்திபடுத்தியதா முதல் போஸ்டர்.?! தளபதி விஜயின் வாரிசு எப்படி இருக்க போகுதோ.?!
அண்மையில் ஒரு தகவல் வந்தது. அதாவது, நடிகர் விஜய் தனது அம்மாவுக்கு போன் செய்து , நான் வீட்டிற்கு வருகிறேன். அப்பாவை இருக்க சொல்லுங்க என கூறினாராம். பின்னர் அப்பா – அம்மா இருவரையும் சந்தித்தாராம் விஜய். இந்த செய்தி நேற்று கசிந்தது.
ஆனால் உண்மையில் அப்படி ஒரு சந்திப்பு நிகழவே இல்லை என்கின்றனர் சினிமா வட்டாரங்கள். விஜய் பட ஷூட்டிங்கில் தான் இருந்தார். அதனால் இந்த சந்திப்பு நிகழவே இல்லை என்று கூறுகின்றனர்.