Categories: Cinema News latest news

விஜய் – மனைவிக்கு இடையில் விரிசல் விழ இதுதான் காரணமா? அவங்க சொல்றது சரிதானே!..

Vijay: விஜய் தன்னுடைய மனைவி சங்கீதா மற்றும் மகன் சஞ்சயிடம் இருந்து பிரிந்து இருப்பதும், அவர்களுக்குள் உரசல் இருப்பதும் அனைவருக்கும் தெரிந்த கதை தான். ஆனால் அதற்கு ஒரு முக்கிய காரணம் இருப்பதும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

கோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். அவர் லியோ படத்தினை தொடர்ந்து தற்போது கோட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அப்படத்தினை முடிந்த பின்னர் சினிமாவில் இருந்து 2 வருடத்துக்கு ஒரு பெரிய ப்ரேக் எடுக்க இருக்கிறாராம். அந்த காலத்தில் தன்னுடைய அரசியல் கட்சியை அறிமுகப்படுத்த இருக்கிறார்.

இதையும் படிங்க: அந்த கில்மா படத்தில் நடிச்சதே பாருங்க! இது ரஜினியை பத்தி பேசுதா? ரம்பாவை கிழித்தெடுத்த பிரபலம்

எம்.ஜி.ஆர் மாதிரி உச்ச நட்சத்திரமாக இருக்கும் நேரத்திலே தைரியமாக அரசியலுக்குள் வரும் விஜயின் எண்ணத்தினை பலரும் பாராட்டத் தொடங்கி இருக்கின்றனர். கண்டிப்பாக அவரின் கேரியரில் இது மிகப்பெரிய முடிவு என்றே கருதப்படுகிறது. அரசியல் வேலை ஒரு பக்கம் என்றாலும் குடும்பத்தில் சர்ச்சையான நிலையிலே இருக்கிறார் விஜய்.

கிட்டத்தட்ட அப்பா, அம்மாவுடன் பேசுவே இல்லை. அதுப்போல மனைவி, பிள்ளைகளுடன் முரண்பாடு நிலவுவதாகவே கூறப்படுகிறது. அதற்கு காரணம் குறித்து விசாரிக்கும் போது, விஜய் அரசியல் எண்ட்ரி குறித்து முதலில் மனைவி, பிள்ளைகளிடம் தான் சொன்னாராம். சங்கீதாவுக்கு இதில் பெரிய விருப்பமே இல்லையாம். இத்தனை நாள் சம்பாரித்த மொத்த பணத்தினையும் அரசியல் கட்சிக்குள் போட்டால் அது பெரிய பாதகமாகி விடுமே எனக் கேள்வி கேட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: ஒருவழியா பிளான் போட்ட விஷால்!.. இது நடந்தா நடிகர் சங்க கட்டிடம் ரெடி!.. ஆனா நடக்குமா?!..

Published by
Akhilan