அன்னைக்கே சொன்னேன் யாராவது கேட்டீங்களா...? தளபதி 66 அண்ணனாக நடிப்பது அவர்தான்!....
பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. ஒரு பாடல் காட்சி கூட சென்னையில் நடந்தது. மேலும் இந்த படத்திற்கான அடுத்தக்கட்ட செட்டும் போடப்பட்டு வருகிறது.
இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படத்தை தோழா திரைப்படம் மூலம் தமிழிலும் கவனம் ஈர்த்த வம்சி இந்த படத்தை இயக்குகிறார். தெலுங்கில் பல ஹிட் படங்களுக்கு இசையமைக்கும் தமன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். மேலும், தெலுங்கில் அதிக பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார்.
இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமாரும் நடிக்கிறார். இந்த நிலையில் விஜய்க்கு அண்ணனாக நடிகர் மோகன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதை மோகன் அவர்களே நேரடியாக மறுத்து விட்டார். ஆனால் விஜய்யின் சகோதரராக குஷி படத்தில் விஜய்க்கு நண்பராக நடித்த நடித்த நடிகர் ஷியாம் தான் நடிக்கவுள்ளார் என செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
இவர் ஏற்கெனவே 12பி, இயற்கை போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பரீட்சையமானவர். மேலும் இவர் விஜயின் தீவிர ரசிகர் என ஒரு பேட்டியில் அவரே தெரிவித்துள்ளார். குஷி படத்தில் நடித்த போது விஜய் தான் ஷியாமிடம் நீ ஹீரோவாக நடிக்க வேண்டியவன் என சொன்னாராம். 22 வருடங்கள் கழித்து ஷியாம் விஜய்யுடன் இணையப்போவது இந்த படத்தின் மூலம் தான். ஆகையால் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.