ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவை லீக் செய்தவரை வெளுத்துவிட்ட விஜய்… இப்படி எல்லாம் நடந்திருக்கா?

by Arun Prasad |
Vijay
X

Vijay

விஜய்யுடன் பழகிய பலரும் கூறுவது என்னவென்றால், “அவர் மிக அமைதியான சுபாவம். படப்பிடிப்பு தளத்தில்கூட அவர் அவ்வளவாக யாரிடமும் பேசமாட்டார்” என்பதுதான். ஆனால் ஒரு பக்கம் விஜய்க்கு நன்றாகவே கோபம் வரும் என்பதும் நிதர்சனம். “வில்லு” திரைப்படம் வெளிவந்த பிறகு நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அங்கு வந்த பத்திரிக்கையாளர்கள் இடையூறு ஏற்படுத்தும் விதமாக பேசிக்கொண்டே இருந்தனர். அப்போது விஜய் கோபத்தின் உச்சிக்கே சென்று, “சைலன்ஸ்” என்று கத்திய வீடியோ இப்போது வரை வைரல் ஆன வீடியோவாக வலம் வருகிறது.

Vijay

Vijay

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் பேரரசு, விஜய் ஒரு பத்திரிக்கையாளரிடம் கோபப்பட்டு திட்டியதை குறித்த ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு விஜய், அசின், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலருடைய நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “சிவகாசி”. இத்திரைப்படத்தை பேரரசு இயக்கியிருந்தார். இத்திரைப்படம் வேற லெவலில் ஹிட் அடித்த திரைப்படமாகும்.

Sivakasi

Sivakasi

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு நாள் விஜய்யை சந்திக்க படப்பிடிப்புத் தளத்திற்கு பல பத்திரிக்கையாளர்கள் வந்திருந்தார்களாம். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் அவர் சார்ந்த பத்திரிக்கையில் “சிவகாசி” படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்டுவிட்டார். இதனை பார்த்த விஜய் கடுங்கோபத்திற்கு உள்ளானாராம்.

உடனே அந்த பத்திரிக்கையாளரை ஃபோனில் தொடர்புகொண்ட விஜய், அவரை கண்டபடி திட்டிவிட்டாராம். அப்போதுதான் விஜய்க்கு இவ்வளவு கோபம் வரும் என்பதை பேரரசு தெரிந்துகொண்டாராம். விஜய் அவ்வாறு கோபப்பட்டு கத்தியதை பார்த்த படக்குழுவினர் அரண்டுப்போனார்களாம்.

இதையும் படிங்க: இந்த நிலைமையிலும் விஜயகாந்த் பார்க்க ஆசைப்பட்ட நடிகர்! அவர பாத்து என்ன கேட்டாரு தெரியுமா?

Next Story