எஸ்கேப் ஆக நினைத்த விஜய்.. தயாரிப்பாளரிடம் கோர்த்துவிட்ட சரத்குமார்..

by Arun Prasad |   ( Updated:2023-02-02 07:11:37  )
Vijay and Sarathkumar
X

Vijay and Sarathkumar

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரியை குறித்து நாம் தனியாக கூறத்தேவையில்லை. தமிழ் சினிமாவில் கே.எஸ்.ரவிக்குமார், விக்ரமன் போன்ற பல பிரபல இயக்குனர்களை அறிமுகப்படுத்திய பெருமைக்குச் சொந்தக்காரராக திகழ்பவர் ஆர்.பி.சௌத்ரி.

RB Choudary

RB Choudary

குறிப்பாக ஆர்.பி.சௌத்ரி, விஜய்யை வைத்து தயாரித்த “பூவே உனக்காக” திரைப்படம் விஜய்யின் கேரியரில் ஒரு மிகப் பெரிய திருப்புமுனை வாய்ந்த திரைப்படமாக அமைந்தது.

இந்த நிலையில் சமீப காலமாக ஆர்.பி.சௌத்ரி, விஜய்யை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறாராம். இது சம்பந்தமாக விஜய்யை சந்திக்க பல முறை முயன்றிருக்கிறார். ஆனால் விஜய்யோ, சௌத்ரியை சந்திப்பதை தவிர்த்துக்கொண்டே இருந்திருக்கிறார். இதனிடையே ஒரு முறை விஜய்யை சந்திக்கவும் வாய்ப்பு அமைந்திருக்கிறது.

Vijay

Vijay

அப்போது ஆர்.பி.சௌத்ரி, விஜய்யிடம் தனது பேன்னரில் ஒரு படம் நடிக்குமாறு கேட்டிருக்கிறார். அதற்கு விஜய்யோ “சரி, பார்க்கலாம்” என அப்போதைக்கு அவரை சமாளித்துள்ளார். அதன் பிறகும் விஜய்யை அணுக முயற்சி செய்திருக்கிறார் ஆர்.பி.சௌத்ரி. ஆனால் அவரால் விஜய்யை சந்திக்கவே முடியவில்லை.

இதனை தொடர்ந்து “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்துகொண்டிருந்தபோது சரத்குமாரை தற்செயலாக சந்தித்திருக்கிறார் சௌத்ரி. அப்போது “விஜய்யை மீட் பண்ணலாம்ன்னு பாக்குறேன். சந்திக்கவே முடியல. நீங்க கொஞ்சம் அவர்கிட்ட பேசமுடியுமா?” என கேட்டிருக்கிறார். ஆனால் சரத்குமாரோ விஜய்யிடம் எதுவுமே கேட்காமல், ஆர்.பி.சௌத்ரியை நேராக “வாரிசு” படப்பிடிப்புத் தளத்திற்கே அழைத்து வந்துவிட்டாராம்.

Sarathkumar

Sarathkumar

திடீரென சரத்குமாருடன் ஆர்.பி.சௌத்ரியை பார்த்த விஜய்க்கு ஷாக் ஆகிவிட்டதாம். மேலும் மிகப்பெரிய தர்ம சங்கடத்திற்கும் உள்ளானாராம் விஜய். எனினும் ஆர்.பி.சௌத்ரியின் மனதை நோகடிக்காமல் பட்டும் படாமல் ஒரு பதிலை சொல்லி அனுப்பிவிட்டாராம் விஜய். இதனால் படப்பிடிப்பில் சரத்குமாரின் மேல் விஜய் கடும்கோபத்தில் இருந்தாராம். ஆனால் அதனை வெளிக்காட்டிக்கொள்ளவில்லையாம்.

இதையும் படிங்க: விஜய் பட தயாரிப்பாளரை பகைத்துக்கொண்ட விஜய் சேதுபதி… ஆஃபீஸுக்குள் புகுந்து துணிகர செயல்..

Next Story