லீக் ஆன பாடலால் ஏற்பட்ட கடுப்பு… படப்பிடிப்பில் ரெய்டு விட்ட விஜய்… இப்படி கொந்தளிச்சிட்டாரே!!

by Arun Prasad |
Vijay
X

Vijay

விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் குஷ்பு, யோகி பாபு, சரத்குமார், ஷாம், சங்கீதா, பிரகாஷ்ராஜ் என பலரும் நடித்து வருகின்றனர்.

இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளிவருகிறது. தெலுங்கில் “வாரசுடு” என்ற பெயரில் வெளியாகிறது. மேலும் இத்திரைப்படம் வருகிற 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் எனவும் அறிவிக்கப்பட்டது.

Vijay

Vijay

இந்த நிலையில் “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது முதலே அத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆனது. இதனை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட பாடல் காட்சி ஒன்று இணையத்தில் லீக் ஆனது.

அந்த வீடியோவை படப்பிடிப்புத் தளத்தில் உயரமான பகுதியில் இருந்து ஒருவர், தனது மொபைல் கேமராவில் படம்பிடித்திருந்ததாக தெரியவந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

Varisu

Varisu

இந்த நிலையில் இந்த செய்தியை கேள்விப்பட்ட விஜய், நேற்று படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, திரைப்படத்தில் பணியாற்றிய லைட்மேன்களை எல்லாம் அழைத்து கோபமாக கத்தினாராம். மேலும் லைட்மேன்களை எல்லாம், அவர்கள் பணிகளை முடித்த பிறகு படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வெளியேற்றிவிட்டுத்தான் படக்குழுவினர் படப்பிடிப்பை தொடங்கினார்களாம். இவ்வாறு ஒரு சூடான தகவலை வலைப்பேச்சு பிஸ்மி தன்னுடைய வீடியோவில் பகிர்ந்துள்ளார்.

“வாரிசு” திரைப்படத்தில் இருந்து லீக் ஆன அந்த பாடலை விஜய்தான் பாடினாராம். அப்பாடலே தற்போது லீக் ஆகியதால்தான் விஜய் பெரும் கோபத்தில் கத்தியதாக பிஸ்மி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story