Categories: Cinema News latest news

மாஸ் காட்டும் பிச்சைக்காரன் 2 தெலுங்கு வசூல்.. தமிழ் நாட்டு வசூலை விட இம்புட்டு அதிகமா?

நடிகர் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன்-2 படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய் ஆண்டனி முன்னணி இசையமைப்பாளராக இருந்து பிரபல நடிகராக மாறியவர். 2016ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

மேலும் இந்த திரைப்படம் ஒடியா, மராத்தி, கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. நேற்று வெளியான இந்த படத்தின் இரண்டாவது பாகம் விஜய் ஆண்டனி இயக்கி உள்ளார்.

இந்த படத்தை விஜய் ஆண்டனியின் சொந்த நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனமே இந்தப் படத்தை தயாரித்தது.

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் ரிலீஸ் ஆன பிச்சைக்காரன்-2 திரைப்படம் தெலுங்கில் பிச்சஃகாடு-2 என்று பெயரிடப்பட்டது. நேற்று வெளியான இந்த படம் உலகம் முழுவதும் முதல்நாள் வசூலாக 9 கோடி ரூபாயை வசூலித்து உள்ளது என கூறப்படுகிறது.

தமிழில் மட்டும் 3.25 கோடி ரூபாயை வசூலித்து உள்ளது. தெலுங்கு மொழியில் 4.5 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் முதல் நாள் தெலுங்கு வசூலை பிச்சைக்காரன் 2 படம் முறியடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமம் & டிஜிட்டல் ஒடிடி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஸ்டார் நெட்வொர்க் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிச்சைக்காரன் – 2 படத்தை அடுத்து ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்திலும் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.

Published by
muthu