ஒரேடியா பாம் போட்டு உலகத்தை அழிச்சிடுங்கடா!..கடுப்பில் விஜய் ஆண்டனி போட்ட டிவிட்...
உலகம் முழுவதும் தற்போது கொரோனா 3வது அலை வேகமாக பரவ துவங்கியுள்ளது. அமெரிக்காவில் ஒரு நாளில் சுமார் 10 லட்சம் பார் பாதிக்கப்பட்டனர். இந்தியாவில் ஒரு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒன்றரை லட்சத்தை தாண்டிவிட்டது.
கொரோனா போதாது என்று ஓமிக்ரான் எனும் புதிய வைரஸ் ஒருபக்கம் பரவி வருகிறது. இந்தியாவில் சுமார் 3500 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழகம் உட்பட பல மாநிலங்களில் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதில், பல துறைகளும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில், பல ஆயிரம் கோடி புழங்கும் சினிமா துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டெல்லி போன்ற சில மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது அப்படியே தொடரவும் வாய்ப்பிருக்கிறது. அல்லது தியேட்டர்கள் மூடப்படவும் வாய்ப்பிருக்கிறது. இதனால்தான் அஜித்தின் வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை.
கொரொனா ஜெட் வேகத்தில் பரவுவதை பார்த்தால் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, இதில், திரையுலகினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய விஜய் ஆண்டனி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘கொரோனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும், எழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும். எவனாவது ஹிரோஷிமா நாகசாகில போட்ட மாதிரி, உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிச்சிட்டா நல்லா இருக்கும்...வாழ்க வளமுடன்’ என கோபமாக பதிவிட்டுள்ளார்.