இளைய மகளுடன் பட புரமோஷனுக்கு திடீரென வந்த விஜய் ஆண்டனி!.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!..

Published on: September 28, 2023
---Advertisement---

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த நிலையில், விஜய் ஆண்டனி தனது மகள் மரணத்துடன் சேர்ந்து தானும் இறந்து விட்டதாக மனம் உடைந்து ட்விட்டரில் போஸ்ட் ஒன்றை போட்டிருந்தார்.

விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் மரணத்தை அறிந்து ஒட்டுமொத்த திரையுலகமும் திரண்டு வந்து விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறியது. மனம் உடைந்து விடக்கூடாது என்றும் மீண்டும் விஜய் ஆண்டனி வலிமையுடன் வரவேண்டும் என்றும் ரசிகர்களும் ஆறுதல் கூறினர்.

இதையும் படிங்க: இது சந்திரமுகியும் காஞ்சனாவும் கலந்த கலவைடா!.. எப்படி இருக்கு வேட்டையன் ஆட்டம்.. சந்திரமுகி 2 விமர்சனம்!

இந்நிலையில், விரைவில் வெளியாக உள்ள தனது ரத்தம் படம் புரமோஷனுக்கு நடிகர் விஜய் ஆண்டனி தனது இளைய மகளுடன் புரோமோஷன் நிகழ்ச்சியில் திடீரென கலந்து கொண்டது ரசிகர்கள் மற்றும் சினிமா உலகினரையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் ஆண்டனி தனது இளைய மகள் லாரா உடன் சி எஸ் அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ரத்தம் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதையும் படிங்க: ஜெயம் ரவியின் ‘இறைவன்’ படம் எப்படி இருக்கு?!.. ரசிகர்கள் சொல்வது என்ன?..

தமிழ் படம், தமிழ் படம் 2 உள்ளிட்ட படங்களை இயக்கிய சி எஸ் அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ரத்தம் திரைப்படம் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், துயரமான இந்த நேரத்திலும் தன்னை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர் மற்றும் உழைப்பை போட்ட இயக்குனர் பாதிப்பு அடையக் கூடாது என்பதற்காக புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் விஜய் ஆண்டனி.

இப்படிப்பட்ட மனிதருக்கா இப்படி ஆகணும் என அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரே துக்கம் விசாரித்தும், ஆறுதல் கூறியும் சென்றது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பிச்சைக்காரன் 2 படத்தின் பூஜைக்கு தனது இளைய மகள் லாராவை அழைத்து வந்து தான் குத்த விளக்கு ஏற்ற வைத்து படத்தை தொடங்கி இருந்தார் விஜய் ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.