எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கிறார் தெரியுமா விஜய் ஆண்டனி? பிரபலம் சொன்ன பகீர் தகவல்

by Rohini |
viijay
X

viijay

Vijay Antony: தமிழ் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது விஜய் ஆண்டனியின் மகள் மரணம். 12ஆம் வகுப்பு படிக்கும் விஜய் ஆண்டனியின் மகளான மீரா நேற்று முன் தினம் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிகாலை நடந்த இந்த சம்பவம் திரையுலகினரை மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் மக்களையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தமிழ் சினிமாவில் ஒரு மதிக்கத்தக்க பிரபலமாக இருப்பவர் விஜய் ஆண்டனி. யாரிடமும் கடிந்து ஒரு வார்த்தை பேசாதவர். அமைதியாக இருப்பவர். மென்மையாக பேசும் தன்மை கொண்டவர். எதையும் நேர்மறையாகவே எடுத்துக் கொள்பவர்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் படம் ஓடிய தியேட்டரை கொளுத்திய ரசிகர்கள்!… காரணம் என்ன தெரியுமா?…

சமீபத்தில் கூட தற்கொலைப் பற்றிய விழிப்புணர்வையும் பொது இடங்களில் பேசியிருக்கிறார்.இப்படி இருக்கும் விஜய் ஆண்டனிக்கு இப்படிப்பட்ட நிலையா? என்று நினைக்கும் போது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்புதான் பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பில் விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் அவருக்கு முகத்தாடைகளே நொறுங்கி விட்டதாகவும் முழுமையாகவே அந்த தாடைகளை இப்போது மாற்றியிருக்கிறார்கள் எனவும் வாயில் இருக்கும் இரண்டு பக்க கடா பற்கள் மட்டுமே ஒரிஜினல் என்றும் வலைப்பேச்சு அந்தனன் கூறினார்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவோடு ஜோடியா நடிச்சு என்ன பிரயோஜனம்? விஜயகுமாருக்கு இப்படியெல்லாம் நடந்திருக்கா?

அதனால் ஒரு இட்லீயை சாப்பிட கிட்டத்தட்ட அரைமணி நேரம் ஆகுமாம் விஜய் ஆண்டனிக்கு. இப்படி இருக்கும் சூழ் நிலையில் தன் மகள் இறந்த துக்க செய்தியை கேட்டு கதறி அழவும் முடியாமல் இருந்திருக்கிறார் என்று தெரிவித்தார்.

இப்படிப்பட்ட சூழ் நிலையில் மனசை வெறுத்து கதறி அழுதால்தான் ஓரளவு பாரம் குறையும் என்று சொல்வார்கள். ஆனால் அதைக் கூட செய்யமுடியாத நிலையில் இருக்கும் விஜய் ஆண்டனியை பார்க்கும் போது மனசு மிகவும் வலிக்கிறது. கூடிய சீக்கிரம் இதிலிருந்து மீண்டு வர விஜய் ஆண்டனிக்காக பிரார்த்திப்போம் என்று பல ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: இப்பதான் பணக்காரனா ஃபீல் பன்றேன்னு சொன்னதுக்கு பின்னால இவ்வளவு இருக்கா!.. அந்த சம்பவம்தான் காரணமாம்…

Next Story