
Cinema News
நான் சாராயம்தான் குடிப்பேன்!… இப்படி பளிச்சின்னு சொல்லிட்டாரே விஜய் ஆண்டனி!….
இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. இவர் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் கஷ்டப்பட்டு சினிமா துறைக்கு வந்தவர். விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். இவரின் பல பாடல்கள் அதிரி புதிரி ஹிட் ஆகியுள்ளது.
சில வருடங்களுக்கு முன் திடீரென ஹீரோ அவதாரம் எடுத்தார் விஜய் ஆண்டனி. நான், சலீம் ஆகிய படங்கள் ஹிட் அடிக்க அடுத்த அவரின் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் ரூ.100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. திமிரு புடிச்சவன், கோடியில் ஒருவன் ஆகிய படங்களும் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்களை விஜய் ஆண்டனியே தயாரித்தார். தற்போது பிச்சைக்காரன் 2 திரைப்படம் மூலம் இயக்குனர் அவதாரமும் எடுத்துள்ளார்.
இதையும் படிங்க: அந்த மாதிரி ஆப்பில் சம்பாதிக்கும் அஜித் பட நடிகை…! என்னங்க கடைசில இப்படி இறங்கிட்டீங்க?
இந்நிலையில், சமீபத்தில் ஒரு யுடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது ‘தொடக்க காலத்தில் சரக்கு வாங்கவே காசில்லமால் நீங்கள், உங்கள் நண்பர்கள் எல்லாரும் கஷ்டப்பட்டதாகவும், உங்கள் நண்பர்களில் ஒருவர் சரக்குக்கு பதில் கோரக்ஸ் எனும் இருமல் மருந்தை குடிப்பார் எனவும் கேள்விப்பட்டோம். அது உண்மையா’ என பேட்டியெடுத்தவர் கேள்வி கேட்டார்.
அதற்கு பதில் கூறிய விஜய் ஆண்டனி ‘என் நண்பரில் ஒருவர் அப்படி செய்வார். தேவைப்பட்டால் நான் சரக்குதான் அடிப்பேன். இதை குடிப்பதற்கு பதில் சாராயமே குடிக்கலாமே என நான் கேட்டால் ‘இது வேற மாதிரி கிக்’ என அவர் கூறுவார். நான் அப்படியெல்லாம் செய்ததில்லை. சாராயம்தான் குடிப்பேன்’ என மிகவும் ஓப்பனாக பதில் அளித்துள்ளார் விஜய் ஆண்டனி.