நண்பர்களுடன் ஜாலியாக பீர் அடிக்கும் விஜய் ஆண்டனி....தீயாய் பரவும் வீடியோ....
இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. இவர் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் கஷ்டப்பட்டு சினிமா துறைக்கு வந்தவர். விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். இவரின் பல பாடல்கள் அதிரி புதிரி ஹிட் ஆகியுள்ளது.
சில வருடங்களுக்கு முன் திடீரென ஹீரோ அவதாரம் எடுத்தார் விஜய் ஆண்டனி. நான், சலீம் ஆகிய படங்கள் ஹிட் அடிக்க அடுத்த அவரின் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் ரூ.100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. அவர் நடிப்பில் திமிரு புடிச்சவன், கோடியில் ஒருவன் ஆகிய படங்களும் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது.
இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்களை விஜய் ஆண்டனியே தயாரித்தார். தற்போது பிச்சைக்காரன் 2 திரைப்படம் மூலம் இயக்குனர் அவதாரமும் எடுத்துள்ளார். மேலும், அவரது நடிப்பில் கொலை என்கிற திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், தனது நண்பர்களுடன் அவர் ஜாலியாக பீர் அடிக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சில மாதங்களுக்குக் முன்பு ஒரு யுடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ‘நான் சரக்கடிப்பேன்’ என மிகவும் ஓப்பனாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.....
https://www.instagram.com/reel/ChXjuR8BR-Y/?utm_source=ig_web_copy_link