Categories: Cinema News latest news tamil cinema gossips

என் பேர்ல இன்ஷூரன்ஸா.?! திடுக்கிட்ட விஜய் ஆண்டனி.! இது என்னடா புதுசா இருக்கு.?!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தமிழ் சினிமாவுக்கு புது புது வார்த்தைகளை தனது பாடல்கள் மூலம் அறிமுகப்படுத்தியவர் விஜய் ஆண்டனி. தனது இசையில் முன்னணி ஹீரோக்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களை இவர் கொடுத்துள்ளார்.

பின்னர் ‘நான்’ எனும் திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கிய இவர், தனக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து தொடர்ந்து நடித்து வருகிறார். சலீம், பிச்சைக்காரன், கோடியில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தன. தொடர்ந்து இவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் தயாராகி வருகிறது.

இந்நிலையில் ஒரு பிரபல தயாரிப்பாளர் விஜய் ஆண்டனியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை எடுக்கத் திட்டமிட்டாராம். தற்போது படம் தயாரிக்கும் சிலர், தங்களது படத்திற்கு ஏதேனும் தடை வந்துவிட்டால் ஒருவேளை படம் ரிலீஸ் ஆகாமல் இருந்து விட்டால் பணம் கிடைக்கும்படி இன்சூரன்ஸ் செய்வார்கள். அந்த படத்தின் மீது இன்சூரன்ஸ் செய்வார்கள். அந்த படம் வெளியிடாமல் இருந்துவிட்டால் அந்த இன்சூரன்ஸ் பணம் தயாரிப்பாளருக்கு கைகொடுக்கும்.

இதையும் படியுங்களேன் – தனது திருமணத்திற்கே பேரம் பேசிய நயன்தாரா.!? உங்கள் அறிவுக்கு நீங்க எங்கேயோ இருக்கனும் மேடம்.!

இப்படி இருக்க அந்த தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி மீதே இன்சூரன்ஸ் போட்டுள்ளாராம். இதனை அறிந்த விஜய் ஆண்டனி கடுமையாக கோபப்பட்டாராம். ‘படத்தின் மீது நீங்கள் இன்சூரன்ஸ் போட்டுக்கொள்ளுங்கள், அது எப்படி என்னை கேட்காமல், என் மீது நீங்கள் இன்சூரன்ஸ் போட்டு கொள்ளலாம்?’ என்று அந்த தயாரிப்பாளரை வெளுத்து வாங்கி விட்டாராம்.  மேலும், அந்த படத்தில் நடிக்கப் போவதில்லை என்றும் கூறிவிட்டாராம்.

கொஞ்சம் ஆர்வக்கோளாறு காரணமாக நடந்து கொண்ட அந்த தயாரிப்பாளர், தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறாராம். உண்மையில் விஜய் ஆண்டனி செய்தது சரிதான் என்று சினிமா வட்டாரத்தில் பலர் கிசுகிசுக்கின்றனர்.

Published by
Manikandan