
Cinema News
அந்த இயக்குனரிடம் சிக்கிய விஜய் ஆண்டனி…இந்த சுவரு இன்னும் எத்தனை பேர காவு வாங்க போகுதோ!…
பேன் இந்தியா என்ற வார்த்தை ஒட்டு மொத்த சினிமா உலகையும் புரட்டிப் போட்டிருக்கிறது. அதுவும் கே.ஜி.எஃப் படம் வந்த பிறகு சினிமாவில் ஒரு தாக்கத்தையே ஏற்படுத்தியது என்று கூறலாம். சினிமாவில் சில இயக்குனர்கள் அந்த ஒரு இடத்தை நோக்கித்தான் தற்போது நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் தமிழி சினிமாவில் பிரபல இயக்குனர் சுசீந்திரனும் சேர்ந்துள்ளார். இவர் ஏற்கெனவே பாண்டியன் நாடு, நான் மகான் அல்ல போன்ற பல படங்களை இயக்கியவர். அண்மைக் காலமாக இவர் இயக்கிய ஒரு சில படங்கள் சரியாக போகாததால் வித்தியாசமான கதையை உருவாக்க முயற்சித்திருந்தார்.
அந்த வகையில் ஒரு கதையையும் எழுதி கதாநாயகனை தேடும் முயற்சியில் இருந்த இவருக்கு யாரும் கிடைக்காததால் லட்டாக மாட்டிக் கொண்டவர் நடிகர் விஜய் ஆண்டனி. ஏற்கெனவே விஜய் ஆண்டனி தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்டு சுமூகமாக போய்க்கொண்டிருக்க தற்போது சுசீந்திரனுடன் இணைந்திருப்பது இவரின் நிலைமை என்ன ஆகுமோ? என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த கதை காட்டுப் பகுதியை மையமாக வைத்து அமைவதால் வனப்பகுதியை நோக்கி படையெடுத்திருக்கிறார் இயக்குனர். அங்கேயே தங்கி மேலும் படத்திற்கான கதையை எழுதிக்கொண்டிருக்கிறாராம். படத்தில் சத்யராஜ், மற்றும் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் ஹிந்தியில் ஒரு பேன் இந்தியா படமாக எடுக்கப்பட உள்ளதாக இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.