இவரே வேண்டாம்னாலும் விடமாட்டாங்களே!.. விஜய் ஆண்டனிக்கு வலை வீசிய இயக்குனர்…

Vijay Antony: இசையமைப்பாளராக இருந்து நான் படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் விஜய் ஆண்டனி. இந்த படம் சூப்பர் ஹிட் அடித்து வெற்றி பெற்றது. இதன் காரணமாக விஜய் ஆண்டனி தொடர்ந்து நடிக்க துவங்கினார். அப்படி வெளிவந்த சலீம், இந்தியா பாகிஸ்தான் போன்ற படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
ஆனால், இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் சூப்பர் ஹிட் அடித்து ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து விஜய் ஆண்டனியை முன்னணி நடிகர்களில் ஒருவராக மாற்றியது. இந்த படம் தெலுங்கிலும் ஹிட் அடித்து விஜய் ஆண்டனிக்கு ஆந்திராவில் மார்க்கெட்டை உருவாக்கியது.
அதன்பின் விஜய் ஆண்டனியின் படங்கள் எல்லாமே தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியானது. சினிமா என்பது செண்டிமெண்ட் உலகம். படத்தின் தலைப்பு பாசிட்டிவாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், விஜய் ஆண்டனிக்கு அந்த நம்பிக்கையெல்லாம் இல்லை. பிச்சைக்காரன், சைத்தான், எமன், கொலைகாரன் என தலைப்பு வைப்பார்.

சமீபகாலமாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவரும் படங்கள் ஓடுவதில்லை. கொலை, ரத்னம், ரோமியோ, மழை பிடிக்காத மனிதன், ஹிட்லர் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது. இப்போது ககன மார்கன், சக்தி திருமகன் ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். அதோடு, இனிமேல் நடிப்பதை குறைத்துவிட்டு இசையமக்கும் பணியில் கவனம் செலுத்தலாம் என விஜய் ஆண்டனி முடிவெடுத்திருந்தார் விஜய் ஆண்டனி.
ஏனெனில், இசையமைப்பாளராக பல ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. காதலில் விழுந்தேன், வேட்டைக்காரன், வேலாயுதம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். துவக்கத்தில் சவுண்ட் என்ஜினியராக வேலை செய்த இவர் ஒரு கட்டத்தில் இசையமைப்பாளராக மாறினார்.
இனிமேல் நடிப்பு வேண்டாம் என விஜய் ஆண்டனி முடிவெடுத்திருக்கும் நிலையில் சமீபத்தில் வெளிவந்து பாராட்டை பெற்ற ஜென்டில்வுமன் பட இயக்குனர் ஜோஸ்வா சேதுராமன் சொன்ன கதையில் நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறார் விஜய் ஆண்டனி. ஏனெனில், அந்த படத்தின் கதை விஜய் ஆண்டனிக்கு மிகவும் பிடித்துவிட்டதாம்.