கோரமான விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி… ஆபத்தான நிலையில் அவசர நிலை சிகிச்சை…

Published on: January 17, 2023
Vijay Antony
---Advertisement---

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தற்போது “பிச்சைக்காரன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்று விஜய் ஆண்டனி, கதாநாயகியுடன் ஸ்பீட் போட்டில் வேகமாக பயணிப்பது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டது. விஜய் ஆண்டணிக்கு நீச்சல் தெரியாத நிலையிலும் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி அந்த ஸ்பீட் போட்டை இயக்கியுள்ளார்.

Vijay Antony
Vijay Antony

அப்போது மிகவும் ஸ்பீடாக விஜய் ஆண்டனி படகை இயக்க, அந்த படகு கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த படகின் மீது மோதி விபத்துக்குள்ளானதாம். கதாநாயகிக்கு லேசான காயம் ஏற்பட, விஜய் ஆண்டனியோ நீருக்குள் மூழ்கிவிட்டாராம். அதன் பின் அங்கிருந்த உதவி கேமராமேன் ஒருவர் நீச்சல் அடித்துச் சென்று விஜய் ஆண்டனியை தூக்கிக்கொண்டு வந்தாராம்.

நீருக்குள் மூழ்கியதால் தண்ணீரை அதிகளவில் குடித்துவிட்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. அதன் பின் அவரை கரைக்கு தூக்கிட்டு வந்து முதலுதவி செய்து தண்ணீரை வெளியே எடுத்திருக்கிறார்கள். மேலும் விஜய் ஆண்டனியின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததாம்.

Vijay Antony
Vijay Antony

மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்த விஜய் ஆண்டனியை அங்கிருந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்திருக்கிறார்கள். இந்த நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்பு விஜய் ஆண்டனியின் உடல் நலம் குறித்து தயாரிப்பாளர் தனஞ்சயன் அவரது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

விஜய் ஆண்டனியின் உடல் நிலை தேறி வருவதாகவும், மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் அவர் இருக்கிறார் எனவும் தயாரிப்பாளர் தனஞ்சயன் கூறியுள்ளார். மேலும் விஜய் ஆண்டனியின் குடும்பத்தார் தற்போது மருத்துவமனையில் அவருடன்தான் இருக்கிறார்கள் எனவும் விரைவில் விஜய் ஆண்டனியை சென்னைக்கு அழைத்துவர உள்ளார்கள் எனவும் தனது டிவிட்டில் தனஞ்சயன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.