Categories: latest news

அடுத்த பட டைட்டில சொன்ன விஜய் ஆண்டனி.. ஆள விடுங்கடா சாமினு ஓடிய தயாரிப்பாளர்

Vijay Antony: நேற்று விஜய் ஆண்டனி நடித்த  ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. விஜய் மில்டன் இயக்கத்தில் தயாரான இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதற்கு விஜய் ஆண்டனி வித்தியாசமான கெட்டப்பில் வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

அது வேறு ஒன்றும் இல்லை. அவர் சமீபத்தில் நடித்து வரும்  ‘ஹிட்லர்’ படத்தின் மேக்கப்பில் வந்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா திரைப்படமாக தயாராகிக் கொண்டு வரும் ஹிட்லர் படத்தில் தற்போது விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். வானம் கொட்டட்டும் படத்தை இயக்கிய தனா என்பவர்தான் ஹிட்லர் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: சனிக்கிழமை சரிவா?.. சக்சஸா?.. கல்கி 2898 ஏடி 3 நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா பங்கு?..

அந்தப் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில்தான் டிரைலர் வெளியீட்டு விழாவும் நடந்திருக்கிறது. அதனால் அந்த மேக்கப் கலைப்பதற்கு அரை மணி நேரம் ஆகுமாம். அதன் காரணமாகவே ட்ரைலர் வெளியீட்டு விழாவும் தன்னால் தாமதமாக கூடாது என்பதால் ஹிட்லர் பட இயக்குனரின் அனுமதியோடு அப்படியே மழை பிடிக்காத மனிதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு வந்திருப்பதாக விஜய் ஆண்டனி கூறினார்.

மேலும் அவரிடம் பத்திரிக்கையாளர்கள் பல கேள்விகளை முன்வைத்தனர். அதில் அவருடைய பட டைட்டில் பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டது. விஜய் ஆண்டனியை பொருத்தவரைக்கும் அவர் நடித்த படங்களின் டைட்டிலில் ஒரு மிருகத்தனம் இருக்கும். சென்டிமென்டே இருக்காது. பிச்சைக்காரன், கொலை போன்ற டைட்டிலை பார்த்தாலே தெரியும் .

இதையும் படிங்க: ரஜினிலாம் பெரிய மேட்டரே இல்ல! வேட்டையனோடு மல்லுக்கு நிற்க தயாரான ‘கங்குவா’.. என்ன காரணம் தெரியுமா?

அப்படி இருக்கும்போது உங்களுக்கு செண்டிமெண்ட்டே கிடையாதா? சென்டிமென்ட் பார்க்க மாட்டீர்களா என ஒரு நிருபர் கேட்டார். அதற்கு விஜய் ஆண்டனி  ‘நம் மனசு தான் காரணம். நீங்கள் ஒரு ராகு காலத்தில் படத்தை எடுக்க சொன்னால் கூட எடுப்பேன். எமகண்டத்தில் படத்தை ரிலீஸ் செய்தால் கூட ரிலீஸ் செய்வேன். சென்டிமென்ட் எல்லாம் பார்ப்பது கிடையாது’ என கூறிவிட்டு உடனே  ‘ராகு காலம், எமகண்டம் இந்த டைட்டில் நல்லா இருக்கிறதே’ என கூறிய விஜய் ஆண்டனி

அருகில் இருந்த தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் ‘ சார் இந்த டைட்டில் என்னோடது. யாருக்கும் கொடுக்காதீர்கள். அடுத்த படத்திற்கு இதுதான் டைட்டிலாக வைக்க போகிறேன்’ என கூறினார். உடனே அவர் அருகில் இருந்த தயாரிப்பாளர் டி சிவா விஜய் ஆண்டனியை பார்த்து  ‘தயவுசெய்து அந்தப் படத்தை நீங்கள் உங்க சொந்த செலவிலேயே எடுங்கள்’ எனக் கூறியது அரங்கத்தில் இருப்பவர்களை சிரிக்க வைத்தது.

இதையும் படிங்க: கெடைச்ச வாய்ப்புல கோல் போட்டு அசத்திய வாலி… அண்ணாவிடம் இருந்து வந்த திருத்தம்..!

Rohini

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

4 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

4 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

11 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

12 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

14 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago