இது மட்டும் நடக்கலைன்னா விஜய் ஆண்டனிக்கு இந்த நிலைமை வந்திருக்கவே வந்திருக்காது… எல்லாம் நேரம்தான் போல…
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தற்போது “பிச்சைக்காரன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் நடைபெற்று வந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்பு விஜய் ஆண்டனி, கதாநாயகியுடன் ஸ்பீட் போட்டில் வேகமாக பயணிப்பது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டது. விஜய் ஆண்டணிக்கு நீச்சல் தெரியாத நிலையிலும் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி அந்த ஸ்பீட் போட்டை இயக்கியுள்ளார்.
அப்போது மிகவும் ஸ்பீடாக விஜய் ஆண்டனி படகை இயக்க, அந்த படகு கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த படகின் மீது மோதி விபத்துக்குள்ளானது. கதாநாயகிக்கு லேசான காயம் ஏற்பட, விஜய் ஆண்டனியோ நீருக்குள் மூழ்கிவிட்டார்.
அதன் பின் அங்கிருந்த உதவி கேமராமேன் ஒருவர் நீச்சல் அடித்துச் சென்று விஜய் ஆண்டனியை தூக்கிக்கொண்டு வந்த நிலையில் அவருக்கு முதலுதவி செய்தி தண்ணீரை வெளியே எடுத்தார்கள். மேலும் விஜய் ஆண்டனியின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததாம்.
மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்த விஜய் ஆண்டனியை அங்கிருந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்திருந்தார்கள். தீவிர சிகிச்சைக்குப் பிறகு உடல் நிலை சீராக இருப்பதாக தகவல் வந்தது. எனினும் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மணி ரத்னம் படத்துக்கு டப்பிங் பேசிய டாப் நடிகை… யார்ன்னு தெரிஞ்சா அசந்துப்போய்டுவீங்க??
“பிச்சைக்காரன் 2” படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் படத்தில் ஒரு பாடல் காட்சி இருந்தால் நன்றாக இருக்கும் என படக்குழுவினர் நினைத்தார்களாம். அந்த பாடல் காட்சியை படமாக்கலாம் என்றுதான் மலேசியாவில் உள்ள லங்காவி தீவுக்குச் சென்றார்களாம். அப்படி அவர்கள் படமாக்கும்போதுதான் விபத்து நேர்ந்திருக்கிறது. அவர்கள் அப்படி ஒரு முடிவை எடுக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் இப்படி ஒரு விபத்தில் விஜய் ஆண்டனி சிக்கியிருக்கமாட்டார்.