விஜய் சேதுபதியையே திணறவைக்கும் விஜய் ஆண்டனி..? கைவசம் இத்தனை படங்களா??
விஜய் நடித்த “சுக்ரன்” என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகியவர் விஜய் ஆண்டனி. தனது முதல் படத்திலேயே வேற லெவல் ஹிட் ஆல்பங்களை கொடுத்து தனக்கென ஒரு தனித்துவ இடத்தை பிடித்தவர் இவர்.
அதன் பின் இவர் தொட்டதெல்லாம் ஹிட் என்பது போல் தொடர்ந்து பல வெறித்தனமான ஆல்பங்களை கொடுத்தார். குறிப்பாக இவர் பாடல்களில் வரும் “ஜிப்ரிஷ்” வார்த்தைகள் மிகவும் பிரபலமானவை.
இவ்வாறு பல திரைப்படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்து வந்த விஜய் ஆண்டனி, “நான்” திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அத்திரைப்படம் மாஸ் ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து “சலீம்”, “பிச்சைக்காரன்”, “சைத்தான்”, “காளி”, “கொலைகாரன்” என பல திரைப்படங்களில் நடித்தார்.
தமிழில் விஜய் சேதுபதிதான் தொடர்ந்து அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகராக திகழ்ந்து வருகிறார். இவ்வாறு எந்த நடிகரும் செய்யாத ஒரு முயற்சியை விஜய் சேதுபதி செய்து வருகிறார். தமிழில் பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் விஜய் சேதுபதி தற்போது ஹிந்தியில் “ஜவான்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் ஹிந்தியில் ஒரு வெப் சீரீஸிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் விஜய் சேதுபதியையே ஓவர் டேக் செய்யும் வகையில் பல திரைப்படங்களை கைக்குள் வைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.
அதாவது தற்போது “அக்னி சிறகுகள்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் “தமிழரசன்”, “காக்கி” ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இத்திரைப்படங்கள் வெளிவர தயாராக உள்ளன. அதன் பின் “பிச்சைக்காரன் 2” திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். மேலும் ‘கொலை”, “ரத்தம்”, “மழை பிடிக்காத மனிதன்”, ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இது மட்டுமல்லாது “வள்ளிமயில்” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இத்திரைப்படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். இவ்வாறு கிட்டதட்ட 8 படங்களை கைக்குள் வைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. இதன் மூலம் விஜய் ஆண்டனி அடுத்தடுத்த வெளியீடுகளால் திரையரங்குகளை ஆட்கொள்ளப்போகிறார் என தெரியவருகிறது.