தங்கச்சி சென்டிமென்டில் கதறவைக்கும் விஜய் ஆண்டனி… பிச்சைக்காரன் 2 விமர்சனம் இதோ…

by Arun Prasad |   ( Updated:2023-05-19 12:49:57  )
pichai
X

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான “பிச்சைக்காரன்” திரைப்படம் மாஸ் ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து தற்போது “பிச்சைக்காரன் 2” திரைப்படத்தை விஜய் ஆண்டனி இயக்கி, நடித்து, இசையமைத்து, எடிட்டிங்கிலும் பணியாற்றியுள்ளார். இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் இத்திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

கதை

விஜய குருமூர்த்தி, சத்யா என்ற இரு வேடங்களில் விஜய் ஆண்டணி நடித்துள்ளார். இதில் விஜய குருமூர்த்தி ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான சொத்துக்கு சொந்தக்காரராக இருக்கிறார். அவரின் கதையை முடித்துவிட்டு அவரின் சொத்துக்களை அடையவேண்டும் என ஒரு கும்பல் முயன்று வருகின்றது. அதன்படி விஜயகுரு மூர்த்திக்கு மூளை மாற்று அறுவை சிகிச்சை செய்து வேறு ஒருவரின் மூளையை வைத்துவிடுகிறார்கள். இதனை வைத்து விஜய குருமூர்த்தியை ஆட்டுவிக்கலாம் என்று அந்த கும்பல் நினைக்கிறது. அந்த கும்பல் இறுதியில் விஜய குருமூர்த்தியின் சொத்தை அபகரித்ததா இல்லையா? அந்த பல கோடி ரூபாய் சொத்து என்ன ஆனது? என்பதுதான் இத்திரைப்படத்தின் மீதமுள்ள கதை.

நடிகர்-நடிகைகள்

விஜய் ஆண்டனி வழக்கம்போல் சிறப்பான நடிப்பையே கொடுத்திருக்கிறார். கதாநாயகி காவ்யா தாப்பர் கவர்ச்சியில் டாப் கியர் ஏற்றுகிறார். ஆனால் பல காட்சிகளில் காணமால் போய்விடுகிறார். மேலும் ராதா ரவி, ஜான் விஜய், தேவ் கில், ஒய் ஜி மகேந்திரன் போன்ற பலரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

பிளஸ்கள்

விஜய் ஆண்டனியின் இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய துணையாக இருக்கிறது. ஆன்டி பிகிலி, மூளை மாற்று அறுவை சிகிச்சை போன்ற புதுமையான விஷயங்கள் பார்வையாளர்களுக்கு புதிய சுவாரஸ்யமான அனுபவத்தை கொடுக்கிறது. ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்றவைகள் சிறப்பாகவே இருக்கிறது. விஜய் ஆண்டனி ஒரு எடிட்டராக பக்காவாக ஸ்கோர் செய்துள்ளார்.

மைனஸ்கள்

யோகி பாபு காமெடியனாக வந்தாலும் அவரை சரியாக பயன்படுத்தவில்லை. இரண்டாம் பாதியில் வரும் பிளாஷ்பாக் ரசிகர்களின் பொறுமையை சோதித்து விடுகிறது. மேலும் படத்தில் தங்கச்சி சென்டிமென்ட் கொஞ்சம் ஓவராக வழிந்தோடி பார்வையாளர்களை உச் கொட்ட வைக்கின்றது.

படத்தின் திரைக்கதையில் அவ்வளவாக சுவாரஸ்யமில்லை. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் விஜய் ஆண்டனி ஒரு இயக்குனராகவும் மக்களின் மனதில் நின்றிருப்பார். மொத்தத்தில் “பிச்சைக்காரன் 2” சுமார் ரகமே….

இதையும் படிங்க: இந்த படத்தை யாரும் வாங்க மாட்டோம்!.. கை விரித்த விநியோகஸ்தர்கள்.. தக்க சமயத்தில் கமல் செய்த காரியம்!.

Next Story