செல்போனிலேயே தாலி கட்டிய விஜய் ஆண்டனி!.. இது செம லவ் ஸ்டோரியா இருக்கே!...

by சிவா |
செல்போனிலேயே தாலி கட்டிய விஜய் ஆண்டனி!.. இது செம லவ் ஸ்டோரியா இருக்கே!...
X

சவுண்ட் இன்ஜினியராக இருந்து இசையமைப்பளராக மாறியவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளர், சவுண்ட் என்ஜினியர், பின்னணி பாடகர், நடிகர், எடிட்டர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர் என திரையுலகில் பல அவதாரங்களை எடுத்தவர் இவர். எல்லாவற்றிலும் வெற்றி பெற்றும் காட்டியவர்.

எஸ்.ஏ.சி இயக்கிய சுக்ரன் திரைப்படம் மூலம் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த படத்தில் பாடல்கள் இளசுகளை கட்டிப்போட்டது. அதன்பின் டிஷ்யூம், நான் அவனில்லை, காதலில் விழுந்தேன், மரியாதை, நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், அங்காடி தெரு, வேலாயுதம், பிச்சைக்காரன் என 40 திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் இவர். 50க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியும் இருக்கிறார்.

இதையும் படிங்க: குழந்தை சண்டையை மீண்டும் தொடங்கிய ஈஸ்வரி.. கோபிக்கு நேரம் சரியில்லை…

இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி ‘நான்’ என்கிற திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க துவங்கினார். அதன்பின் சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிறு பிடிச்சவன், கொலைகாரன், கோடியில் ஒருவன், தமிழரசன், பிச்சைக்காரன் 2 என பல படங்களிலும் நடித்திருக்கிறார். இப்போதும் பல படங்களில் நடித்து வருகிறார்.

விஜய் ஆண்டனி பாத்திமா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டவர். இந்நிலையில், சமீபத்தில் அவருக்கும் பாத்திமாவுக்கும் இடையே காதல் எப்படி உருவானது என்பது பற்றி பகிர்ந்து கொண்டார். சன் டிவியில் ஆங்கராக இருந்த பாத்திமா சுக்ரன் படத்தில் இடம் பெற்ற உச்சி முதல் பாதம் வரை பாடல் நன்றாக இருப்பதாக சொல்லி என்னை போனில் அழைத்து பாராட்டினார்.

vijay antory

எனக்கு அப்போது திருமண வயது. ஒரு அழகான பெண் என்னை பாராட்டுகிறாரே என சந்தோஷப்பட்டேன். சுமார் ஒரு மணி நேரம் அவரிடம் பேசியது அவர் என் வீட்டின் அருகே வசிப்பது தெரிய வந்தது. அதன்பின் அவரை நேரில் சந்தித்து பேசினேன்.

அவரை சந்தித்த 3வது நாளே ‘உங்களுக்கு பார்க்கும் மாப்பிள்ளையின் லிஸ்ட்டில் என்னையும் வைத்துக்கொள்ளுங்கள்’ என சொன்னேன். 4வது நாள் செல்போனிலேயே அவருக்கு தாலி கட்டிவிட்டேன்’ என விளையாட்டாக சொன்னார் விஜய் ஆண்டனி.

இதையும் படிங்க: தளபதி69 படத்தின் ஹீரோயின் இவரா? அடுத்த இரண்டாவது இன்னிங்ஸா இருக்குமே!..

Next Story