விஜய் வீட்டையே இடிச்சிட்டேன்!.. எதுவுமே சொல்லல!.. விஜய் ஆண்டனி ஃபீலிங்!..

Published on: January 15, 2026
vijay
---Advertisement---

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களுக்கும் இசையமைத்தவர் விஜய் ஆண்டனி. சுக்ரன் திரைப்படம் மூலம் எஸ்.ஏ.சி.சி தான் இவருக்கு முதல் முதலாக இசையமைப்பாளர் வாய்ப்பை கொடுத்தார். விஜயின் வேட்டைக்காரன், வேலாயுதம் போன்ற திரைப்படங்களுக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிகராகவும் மாறினார்.

நான் படத்தில் முதன்முதலாக ஹீரோவாக நடித்தார். அந்த படம் ஹிட் அடிக்கவே அடுத்து சலீம், பிச்சைக்காரன் போட்ட படங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே வெற்றி என்றாலும் பிச்சைக்காரன் படம் 100 கோடி வரை வசூல் செய்து விஜய் ஆண்டனியை ஒரு முக்கிய நடிகராக மாற்றியது. இசையமைப்பாளர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என வந்து கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி

சாலிகிராமத்தில் ஏற்கனவே விஜய் மற்றும் அவரின் பெற்றோர் வசித்துவந்த வீட்டில்தான் தற்போது விஜய் ஆண்டனி வசித்து வருகிறார். இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய விஜய் ஆண்டனி ‘நான் வாடகை வீட்டில் இருந்த போது ஹவுஸ் ஓனர் என்னை காலி பண்ண சொல்லிவிட்டார்.. வேறு வீடு தேடிக்கொண்டிருந்த போது விஜயின் அம்மா ஷோபா மேடம் ‘எங்க வீடு இருக்கு.. அங்க போய் இருக்கலாம்’ என சொன்னாங்க.

அப்ப என்னோட தகுதிக்கு அந்த வீடு ரொம்ப பெருசு.. ஆனாலும் அந்த வீட்டில் போய் தங்கினேன்.. எனது ஸ்டுடியோவுக்கு ஏற்றது போல் சுவரை இடித்து சொந்த வீடு மாதிரி பண்ணிட்டேன்.. ஆனா யாருமே ஒரு வார்த்தை கூட சொல்லல.. எனக்கும் எஸ்.ஏ.சி சாருக்கும் இடையே அப்படி ஒரு பந்தம் இருக்கு’ என சொல்லியிருக்கிறார்.

தற்போது விஜய் நீலாங்கரையில் உள்ள தனி பங்களாவில் வசித்து வருகிறார் அதேபோல் எஸ்.ஏ.சியும், அவரின் மனைவி ஷோபாவும் வேறு ஒரு வீட்டில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.