விஜய் ஆண்டனிக்கு என்னாச்சு?..ட்விட்டரில் கசிந்த செய்தியால் பரிதவிக்கும் ரசிகர்கள்!..
இசையமைப்பாளராக அறிமுகமாகி தனக்கென ஒரு பாணியில் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தவர் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி. இவரது இசையில் மிகவும் பிரபலமான பாடலான ஆத்திச்சூடி பாடல் பட்டி தொட்டியெல்லாம் பரவசமடைந்தது.
அதன் பின் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அதிலும் சற்று வித்தியாசமான கதைகளத்தையே தேர்ந்தெடுத்து நடித்தார். நான், பிச்சைக்காரன், போன்ற பல படங்கள் ரசிக்கும் படியாக அமைந்தது.
மேலும் திரில்லர் கலந்த கதைகளோடு ரசிகர்களை கவர்ந்திழுப்பதில் இவரின் படங்கள் முக்கிய பங்கு வகித்தது. இவரின் நடிப்பில் இன்னும் சில படங்கள் வரிசையாக காத்துக் கொண்டிருக்கின்றன.
இதையும் படிங்க : எம்.ஜி.ஆரை வசூல் சக்கரவர்த்தியாகவே மாற்றியவர்!..இவர் இல்லையேல் மக்கள் திலகமும் இல்லை!..யாருனு தெரியுமா?..
இந்த நிலையில் திடீரென தனது ட்விட்டர் பக்கத்தில் சம்பந்தமே இல்லாமல் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார் விஜய் ஆண்டனி. அந்த பதிவை பார்த்து ரசிகர்கள் என்னாச்சு என்னாச்சு என்று பரிதவித்து வருகின்றனர்.