வகுப்பு பெஞ்சில் தாளம் போட்டு கானா பாட்டு!.. விஜய் ஆண்டனி இசையமைப்பாளர் ஆனது இப்படித்தான்!..

by sankaran v |   ( Updated:2023-11-18 04:19:49  )
வகுப்பு பெஞ்சில் தாளம் போட்டு கானா பாட்டு!.. விஜய் ஆண்டனி இசையமைப்பாளர் ஆனது இப்படித்தான்!..
X

VA1 2

இசை அமைப்பாளரும், நடிகரும், இயக்குனருமான விஜய் ஆண்டனி தனது ஆரம்பகால அனுபவங்கள் பற்றி கூறியுள்ளார். அதில் சினிமாவுல இசை அமைப்பதற்கு முன் தான் எப்படி இசை மேல் ஆர்வமாக இருந்தேன் என்பதையும் இப்படி பகிர்ந்துள்ளார்.

ஒரு மனுஷனுக்கு விவரம் தெரியர நாள் எதுன்னா 8ம் வகுப்புல இருந்து காலேஜ் போற வரைக்கும் தான். நான் பிறந்தது திருச்சி. படிச்சது எல்லாமே திருநெல்வேலிதான். காலேஜ்ல ஸ்ட்ரைக் நடக்கும்போது கோஷம் போடுவாங்க. பனைமரத்துல வவ்வாலா, நம்மாளுக்கு சவாலான்னு கத்துவாங்க. அப்போ ஒரு கூட்டம் போகும்...

சீனியர்ஸ் 8ம் வகுப்பு படிக்கிற என்னை தோள்ல தூக்கி வச்சிட்டு கோஷம் போடச் சொல்வாங்க. இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமான்னு பாட ஆரம்பிச்சேன். இதுவே நாளடைவில் கானாவா ஆரம்பிச்சது.

அப்போ நான் கர்நாடிக்லயோ, வெஸ்டர்ன்லயோ மியூசிக் ஆரம்பிக்கல. கோஷங்கள் போடுறதுதான். நாளடைவில் கானா பாட்டுக்குப் போச்சு. கிளாஸ்ல ப்ரீயா இருக்கும்போது, டைம் கிடைக்கும்போதுலாம் டீச்சர் விஜய் ஒரு பாட்டுப் பாடேன்னு சொல்லிருவாங்க. பெஞ்ச்ல தாளம் போட்டு கத்த ஆரம்பிச்சேன். அப்படியோ கொஞ்சம் கொஞ்சமா இம்ப்ரூவ் ஆச்சு.

டப்பாங்குத்து பாட்டுலாம் பாடுவேன். விஜய்னா நல்லா குத்து சாங் பாடுவான். அவன் வந்தா ஜாலியா இருக்கும்னு சொல்வாங்க. அப்படி தான் இசைக்குள்ள நான் போனேன். நல்ல நல்ல பாட்டுகள்லாம் பாட ஆரம்பிச்சி என்னோட குரல இம்ப்ரூவ் பண்ணுனேன்.

VA3

12ம் வகுப்பு படிக்கும்போது பெஞ்ச்ல தாளம் போட்டு நானா ஒரு பாட்டைப் பாட ஆரம்பிச்சேன். என் பிரண்டு இது என்ன படம்டான்னு கேட்டான். இது நானா எழுதுன புதுப்பாட்டுடான்னு சொன்னேன். நல்லாருக்குடான்னு சொன்னான். வாரத்துக்கு 3 சாங்னு பாடினேன்.

அப்படியே 200 பாடல்கள் வரை பாட ஆரம்பிச்சிட்டேன். அப்புறம் சின்ன சின்ன பக்திப்பாடல்கள் ஆல்பம் போடலாம்னு ஆசைப்பட்டேன். திருச்சி கலைக்காவிரிங்கற இடத்துல போய் சான்ஸ் கேட்டேன்.

மியூசிக்ல என்ன தெரியும்னு கேட்டாரு. ஆனா எதுவுமே தெரியாது. மியூசிக் போடுவேன். பாட்டு பாடுவேன். மக்களுக்குப் பிடிக்கும்னு சொன்னேன். ஏதாவது ஒரு கருவியை வாசிக்கத் தெரியுமான்னு கேட்டாரு. தெரியாதுன்னு சொன்னேன்.

உடனே அப்படின்னா சான்ஸ் கிடைக்காதுன்னு சொல்ல நான் போயி வாத்தியங்கள் இசைக்கலாம்னு முடிவு பண்ணி கத்துக்க ஆரம்பிச்சேன். எனக்குள்ள மியூசிக் டைரக்டர் உள்ள இருந்ததனால சவுண்டு எஞ்சினீயர் கத்துக்கறது ஈசியா இருந்தது. சம்பளம் நிறைய கிடைக்கும்போது நிறைய கருவிகளை வாங்க ஆரம்பிச்சேன்.

சொந்தமாக கம்பெனி வைக்கணும்னு ஆசைப்பட்டேன். அப்புறம் நாலஞ்சு வருஷமா வாய்ப்பு தேடி அலைஞ்சேன். அன்னைக்கு ஒரு கம்பெனிக்கு ஒரு வருஷமாக காலை, மதியம், மாலைன்னு அலைஞ்சிக் கேட்டேன். அவங்க சான்ஸ் கொடுக்கல.

அதனால அந்த நேரத்துல இன்னும் நிறைய கத்துக்கிட்டு மியூசிக் பண்ண ஆரம்பிச்சேன். இன்னைக்கு உங்க முன்னாடி நான் நல்ல பேரு வாங்கிட்டு இருக்கேன்னா எனக்கு வாய்ப்பு கொடுக்காதவங்க தான் காரணம். முதல்ல அவங்களுக்கு நன்றி’ என விஜய் ஆண்டனி கூறியிருந்தார்.

Next Story