Connect with us

Cinema History

பல்ப் வாங்கிய பாட்டை ஹிட்டடிக்க ஆசைப்பட்ட விஜய் ஆண்டனி… தளபதி படத்தில் நடந்த தில்லாலங்கடி…

Vijay Antony: பொதுவாக இசையமைப்பாளர்கள் தங்கள் பாடல்களை வேறு ஒரு பாடலில் இருந்து காப்பி அடிப்பது சாதாரணம் தான். அதில் ஒன்று ஹிட்டடிக்கும் இன்னொன்று இருக்கும் இடம் தெரியாமல் போகும். ஆனால் சரியாக போகாத தன்னுடைய பாட்டையே இன்னொரு படத்தில் போட்டு ஹிட்டடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

2005ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சுக்ரன் படத்தில் இசையமைப்பாளராக எண்ட்ரி கொடுத்தவர் விஜய் ஆண்டனி. முதல் படத்தின் பாடல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்புகளும் குவிந்தது. டிஷ்யூம், நான் அவனில்லை, காதலில் விழுந்தேன் உள்ளிட்ட ஹிட் படங்களுக்கு இசையமைத்தார்.

இதையும் படிங்க: ரஜினி கமலைத் தாண்டி பாலசந்தருக்கு பிடித்த நடிகர்! இவர யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க

புரியாத வார்த்தைகளை போட்டு இசையமைப்பதில் வித்தியாசம் காட்டியே தனக்கான அடையாளத்தினை தமிழ் சினிமாவில் உருவாக்கியவர். கேன்னஸ் கோல்டன் லியன் விருது வாங்கிய முதல் இந்தியன் விஜய் ஆண்டனி தான். பொதுவாக தன்னுடைய பாடலை இசையமைக்கும் போதே அது ஹிட்டாகுமா இல்லையா என்பதை கணித்து விடுவாராம்.

ஆனால் அப்படி அவர் இசையமைத்த ஒரு பாடல் ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது மிஸ்ஸானதாம். நவ்தீப், அரவிந்த் ஆகாஷ், சரண்யா மோகன், மோனிகா ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். அந்த படத்தில் மேனா மினுக்கி என்ற பாடலை போட்டு இருப்பார். அது பெரிய அளவில் ஹிட்டாகும் எனக் கணித்தாராம் விஜய் ஆண்டனி.

இதையும் படிங்க: தக் லைஃப் படத்தில் ஜெயம் ரவி ரோல் இவருக்கு தானாம்… அசால்ட்டாக தட்டி தூக்கிய நடிகர்…

ஆனால் அப்பாடல் எதிர்பார்த்த அளவு ஹிட்டடிக்கவில்லையாம். இதனால் அடுத்து அவர் இசையமைத்த வேட்டைக்காரன் படத்தில் அதே மெட்டை என் உச்சி மண்டையில் கிர்ருங்குதே பாடலுக்கு பயன்படுத்தினாராம். சரியாக கணிக்க அப்பாடல் பட்டித்தொட்டியெங்கும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top