எட்டு படம் கையில...ஒன்னு கூட ரிலீஸ் ஆகல...புலம்பி தவிக்கும் விஜய் ஆண்டனி....
இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. இவர் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் கஷ்டப்பட்டு சினிமா துறைக்கு வந்தவர். விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். இவரின் பல பாடல்கள் அதிரி புதிரி ஹிட் ஆகியுள்ளது.
சில வருடங்களுக்கு முன் திடீரென ஹீரோ அவதாரம் எடுத்தார். நான், சலீம் ஆகிய படங்கள் ஹிட் அடிக்க அடுத்த அவரின் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் ரூ.100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. பிச்சைக்காரன் திரைப்படம் தெலுங்கிலும் இவருக்கு ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வந்தது. அவர் நடிப்பில் திமிரு புடிச்சவன், கோடியில் ஒருவன் ஆகிய படங்களும் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது.
அவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்களை அவரே தயாரித்தார். தற்போது பிச்சைக்காரன் 2 திரைப்படம் மூலம் இயக்குனர் அவதாரமும் எடுத்துள்ளார்.
இவரின் கையில் தற்போது கொலை, ரத்தம், பிச்சைக்காரன் 2, அக்னி சிறகுகள், தமிழரசன் மற்றும் மேலும் 3 திரைப்படங்கள் என மொத்தம் 8 படங்கள் இருக்கிறது. ஆனால், ஒரு திரைப்படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. இது விஜய் ஆண்டனியை அப்செட் ஆக்கியுள்ளதாம். இந்த திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாதவரை எந்த ஒரு புதிய படத்தையும் கமிட் செய்ய வேண்டாம் என முடிவெடுத்துள்ளாராம்.
விஜய் ஆண்டனி தற்போது ரூ.5 கோடி சம்பளம் வாங்குகிறார். படம் ரிலீஸாகி வெற்றி பெற்றால்தான் சம்பளத்தை ஏத்த முடியும். எனவே, அந்த படங்களை ஒன்றன் பின் ஒன்றாக ரிலீஸ் செய்யும் பணியில் தற்போது இறங்கியுள்ளார்.