புருஷனை சரக்கு வாங்கிட்டு வர சொல்லும் மனைவி!.. விஜய் ஆண்டனி ‘ரோமியோ’ டிரெய்லர் எப்படி இருக்கு?
விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ரோமியோ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது.
ரோமியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே முதலிரவில் மிருணாளினி ரவி சரக்கடிப்பது போன்ற போஸ்டர் வெளியாகி இருந்தது. அதுதொடர்பான கேள்விக்கு ஜீசஸ் குடிக்கலையா என பேசி சர்ச்சையில் சிக்கினார் விஜய் ஆண்டனி.
இதையும் படிங்க: ஸ்ருதிஹாசனோட சும்மா சுத்தல!.. தலைவர் 171 எப்போ ஆரம்பிக்குது தெரியுமா? சரவெடி லோகேஷ்!..
அவருக்கு எதிராக கிறிஸ்தவ சபை கூட்டம் கண்டனம் தெரிவிக்க, தான் ஏசுவை தவறாக சொல்லவில்லை என்றும் மீடியாக்கள் தப்பா பேசியதை போல காட்டினார்கள் என மழுப்பி விட்டார். அதன் பின்னர் அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், தற்போது ரோமியோ படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. இந்த படமாவது விஜய் ஆண்டனிக்கு ஓடுமா என்றால் டிரெய்லரே பார்க்கும்படி இல்லை என்பது தான் உண்மை.
இதையும் படிங்க: சூர்யா – சுதாகொங்கரா ‘புறநானூறு’ படம் டிராப் ஆனதுக்கு காரணம் இதுதானாம்!.. அடக்கடவுளே!…
ஷாருக்கான், அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியான ’ரப்தே பனாதி ஜோடி’ படத்தின் கதை போலவே டிரெய்லரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்தப் படத்தை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு, வரலட்சுமி சரத்குமார் நடித்த போடா போடி படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதே போன்ற கதையாக இந்த படம் உருவாகி உள்ளதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
டிரெய்லரில் எனக்கு இப்போ சரக்கடிக்கணும் என மிருணாளினி ரவி பேசும் காட்சிகளும், டிரெய்லர் முழுக்க பல இடங்களில் சரக்கடிக்கும் காட்சிகளும் கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் சண்டைக் காட்சிகளும், மனைவியை கரெக்ட் செய்ய விஜய் ஆண்டனி விடிவி கணேஷிடம் அட்வைஸ் கேட்பது, யோகி பாபு லவ் குருவாக வருவது என கலாட்டா காட்சிகளும் நிறைந்துள்ளன. சமீப காலமாக சோகமான படங்கள் மற்றும் ரத்தம், கொலை, கொலைகாரன் என நடித்து வந்த விஜய் ஆண்டனி சந்தோஷமாக நடித்திருப்பதே படத்திற்கு பாசிட்டிவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
COPYRIGHT 2024
Powered By Blinkcms