என்னிடம் யாரும் கேட்காத கேள்வியை விஜய் கேட்டார்!.. அசந்துட்டேன்!.. ராதாரவி பகிர்ந்த ரகசியம்!…

by சிவா |   ( Updated:2023-04-07 07:27:56  )
radha ravi
X

radha ravi

திரையுலகில் சில சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி பல வருடங்கள் அது பற்றி பேசப்படும். அதில் லட்சுமிகாந்த கொலை வழக்கில் தியாகராஜ பகவாதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் சிக்கி சிறை சென்றது, நடிகர் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டது ஆகிய சம்பவங்கள் முக்கியமானவை. சினிமா துறையினரை பெற்றி தொடந்து அவதூறாக செய்தி வெளியிட்டு வந்ததில் அவர் மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் தியாகராஜ பகவதாருக்கும், என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் சிறை தண்டனை கிடைத்தது. ஆனால், மேல் முறையீட்டில் அவர்கள் குற்றம் செய்யவில்லை என நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்,.

அதேபோல், எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்ட விவகாரம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் 1967ம் வருடம் ஜனவரி 12ம் தேதி நடைபெற்றது. எம்.ஜி.ஆரை சுட்டது, தற்கொலைக்கு முயன்றது, உரிமம் இல்லாத துப்பாக்கியை பயன்படுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் எம்.ஆர்.ராதா கைது செய்யப்பட்டார். சில வருடங்கள் அவர் சிறையிலும் இருந்தார்.

’பெற்றால்தான் பிள்ளையா’ என்கிற படத்தை எம்.ஆர்.ராதாவின் நண்பர் வாசு என்பவர் தயாரித்தார். இந்த படத்தை எடுக்க எம்.ஆர்.ராதாவிடம் ஒரு லட்ச ரூபாய் கடனாக வாங்கியுள்ளார் வாசு. படம் வெளியான பின் அந்த பணத்தை ராத கேட்ட போது எம்.ஜி.ஆரால் நிறைய செலவுகள் ஆகிவிட்டதாக வாசு கூற, இதுபற்றி எம்.ஜி.ஆரிடம் பேச எம்.ஆர்.ராதா மற்றும் வாசு இருவரும் ராமபுரம் சென்றனர்.

அப்போது வாக்குவாதம் முற்றி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியினை எடுத்து ராதா எம்.ஜி.ஆரை சுட்டு விட்டார். அதில் எம்.ஜி.ஆரின் தொண்டையில் குண்டு பாய்ந்தது. அதன்பின்னர், துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு எம்.ஆர்.ராதா தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சைக்குப் பின்னர் இருவரும் உயிர் பிழைந்தனர். இந்த சம்பவத்தால் எம்.ஜி.ஆரின் குரல் மொத்தமாக பாதித்தது. இந்த சம்பவம் பற்றி எம்.ஆர்.ராதாவின் மகனும் நடிகருமான ராதாரவி பல ஊடகங்களில் பேசியுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு ஊடகத்தில் பேசிய ராதாரவி ‘இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் விஜய் என்னிடம் யாரும் கேட்காத ஒரு கேள்வியை கேட்டார். உங்க அப்பா எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற அந்த ஜனவரி 12ம் தேதி மாலை உங்கள் வீட்டில் நீங்கள் எல்லாம் என்ன மனநிலையில் இருந்தீர்கள்?’ எனக்கேட்டார். நான் அசந்துபோய்விட்டேன். ஏனெனில், இப்படி யாரும் யோசித்திருக்க மாட்டார்கள். அதன்பின் அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேன். தற்போது விஜய் அடுத்த சூப்பர்ஸ்டார் என பேசும் அளவுக்கு வளர்ந்துள்ளார்’ என ராதாரவி பேசினார்.

Next Story