உங்களுக்கு அஜித்தானே பிடிக்கும்- மீனாவை வம்பிழுத்த விஜய்.. ஏன் தெரியுமா?
மீனா ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் கியூட் நடிகையாக வலம் வந்தார். தமிழில் ரஜினி, கமல், அஜித், கார்த்திக் போன்ற பல டாப் நடிகர்களுடன் நடித்த மீனா, தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தொடக்கத்தில் “நெஞ்சங்கள்”, “எங்கேயோ கேட்ட குரல்”, “பார்வையின் மறுபக்கம்”, “அன்புள்ள ரஜினிகாந்த்” போன்ற பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய மீனா, தெலுங்கில் வெளிவந்த “நவயுகம்” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து “ராசாவின் மனசிலே”, “இதய வாசல்”, “சேதுபதி ஐபிஎஸ்” போன்ற பல திரைப்படங்களில் நடித்த மீனா, தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக வலம் வந்தார்.
மீனா பல டாப் நடிகர்களுடன் நடித்திருந்தாலும் விஜய்க்கு ஜோடியாக அவர் நடித்ததே இல்லை. எனினும் “ஷாஜகான்” திரைப்படத்தில் இடம்பெற்ற “சரக்கு வச்சிருக்கேன்” என்ற பாடலில் மட்டும் விஜய்யுடன் நடனமாடியிருந்தார் மீனா. இந்த நிலையில் சமீபத்தில் ஒரூ பேட்டியில் கலந்துகொண்ட மீனா, விஜய் தன்னிடம் கேட்ட ஓரு கேள்வியை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
“உங்களுக்கு என்னைய விட அஜித்தானே ரொம்ப பிடிக்கும்?” என ஒரு முறை விஜய் மீனாவிடம் கேட்டாராம். அதற்கு மீனா, “ஏங்க இப்படி கேக்குறீங்க?” என கேட்டாராம். அதற்கு விஜய், “என் கூட நீங்க படமே பண்ணல. நீங்க அஜித் கூடதான் நிறையா படம் பண்ணீங்க” என கூறினாராம்.
இதனை கேட்டதும் மீனா பதறிப்போய், “ஐயையோ விஜய், உங்களுக்கே தெரியும், அந்த காலகட்டத்தில் ரொம்ப பிசியா இருந்தேன். என்னால் கால்ஷீட் கொடுக்கவே முடியலை. உங்களுக்கே தெரிஞ்சிருக்குமே” என கூறினாராம். அதற்கு விஜய், “தெரியும் தெரியும் சும்மா கேட்டேன்” என சிரித்துக்கொண்டே கூறினாராம்.
இதையும் படிங்க: படப்பிடிப்பில் பாலச்சந்தர் செய்யும் ட்ரிக்…இதனால்தான் ஹீரோயின்களுக்கு அவரை ரொம்ப பிடிக்குமாம்!..