More
Categories: Cinema News latest news

விஜயோட இன்ஸ்பிரேஷன் யார் தெரியுமா? அதான் அந்த கெட்டப்பில் மாஸ் காட்டினாரா தளபதி?

Actor Vijay: சினிமாவில் நடிக்க வரும் ஒவ்வொரு நடிகர்களும் தனக்கு யாரையாவது இன்ஸ்பிரேஷன் ஆக வைத்து தான் நடிக்க வருவார்கள். அப்படி இல்லை என்றால் மூத்த நடிகர்களின் தாக்கம் அவர்களுக்குள் ஏதாவது ஒரு வகையில் ஏற்பட்டிருக்கும். அந்த வகையில் விஜய்க்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்த ஒரு பிரபலம் பற்றிய தகவல் தான் இந்த செய்தியில் நாம் பார்க்க இருக்கிறோம்.

கோலிவுட்டில் மிகப்பெரிய அந்தஸ்தை பெற்ற நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். வசூல் சக்கரவர்த்தியாக எம்ஜிஆர் ரஜினி இவர்களுக்கு அடுத்த வரிசையில் விஜய் தான் இப்போது ஒரு மாஸ் நடிகராக இருந்து வருகிறார். தற்போது விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர் இவற்றைப் பார்க்கும் பொழுது மிலிட்டரி கெட்டப்பில் இருப்பதைப் போல் தெரிகிறது.

Advertising
Advertising

இதையும் படிங்க: இந்த போஸ் எப்படி இருக்கு? வெளியான ரஜினியின் நியூ லுக்.. பக்கத்துல யார் நிக்குறாங்கனு பாருங்க

கூடவே பிரபுதேவா அஜ்மல் பிரசாந்த் இவர்களும் அதை மிலிட்டரி கெட்டப்பில் இருப்பதால் ஒருவேளை நான்கு பேரும் ராணுவத்தில் வேலை பார்க்கும் நண்பர்கள் என்பதைப் போல அந்த புகைப்படம் நமக்கு உணர்த்துகிறது. என்ன இருந்தாலும் படம் வெளியான பிறகு தான் எந்த மாதிரியான கதை என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

இதுவரை விஜய் ஒரே மாதிரியான கெட்டப் என்ற வகையில் தான் நடித்து வந்தார். விக்ரம் கமல் இவர்களைப் போல் வெவ்வேறு கெட்டப்களில் இதுவரை விஜய் படங்களில் நடித்ததே இல்லை. ஆனால் வெவ்வேறு கதை களம் கொண்ட படங்களில் நடித்து ஒட்டுமொத்த ஆடியன்சையும் கவர்ந்து வைத்திருக்கிறார் விஜய். இந்த நிலையில் அவர் ஒரு சில படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார்.

இதையும் படிங்க: சிவாஜி படத்தை ரீமேக் செய்து கையை சுட்டுக்கொண்ட துயரம்… அட தயாரிப்பாளர் அந்த நடிகரா?..

அப்படி எந்தெந்த படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறாரோ அப்பொழுதெல்லாம் தன்னிடம் வந்து தான் டிப்ஸ் கேட்பார் என பிரபல ஐபிஎஸ் அதிகாரி ரவி ஒரு பத்திரிக்கை பேட்டியில் கூறியிருக்கிறார். ஐபிஎஸ் அதிகாரி ரவியை பொருத்தவரைக்கும் விஜயை மிகவும் பர்ஷனலாகவே தெரியுமாம்.’

ravi

அவர் வாக்கிங் போகும் போதெல்லாம் விஜய்யை அடிக்கடி பார்ப்பாராம். அப்பொழுது விஜய் வீட்டு முன்பு நாள்தோறும் 10 பேர் அவரை பார்ப்பதற்காக நின்று கொண்டிருப்பார்களாம். அதில் சில பேர் ஒரு பெரிய பஸ்ஸையே கொண்டு வந்து நிப்பாட்டி அதன் டாப்பில் ஏறி விஜய் வீட்டிற்குள் இருக்கிறாரா இல்லையா என்பதை வெளியில் இருந்து பார்ப்பார்களாம். இதனால் தான் விஜய்க்கும் பிரைவேசி வேண்டும் என்பதற்காகத்தான் விஜய் வீட்டு முன்பு அந்த ஒரு பெரிய கேட்டையே போட்டார்களாம்.

இதையும் படிங்க: அஜித் அப்படி செய்வார் என எதிர்பார்க்கவே இல்ல!.. நெகிழும் கிரிக்கெட் வீரர் நடராஜன்!..

Published by
Rohini