6 வயசு குழந்தைக்கு அப்பாவா?.. தல தெறிக்க ஓடிய விஜய்.. அமீர்ட்ட இருந்து தப்பிச்சு அட்லிக்கிட்ட மாட்டிய சம்பவம்..
தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் இப்போது யாரும் நினைச்சு பார்க்க முடியாத அளவில் உயரத்தில் இருக்கிறார். அவரின் வளர்ச்சியை கூட இருந்த இயக்குனர்கள் , நடிகைகள் என அனைவரும் வியந்து பார்த்த வண்ணம் இருக்கின்றனர்.
இப்படி எட்டமுடியாத இருக்கும் விஜயை வைத்து ஒரு சமயம் இயக்குனர் அமீர் ‘கண்ணபிரான்’ என்ற படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தாராம். அந்தக் கதை விஜய்க்கும் பிடித்துப் போக கண்டிப்பாக நாம இத பண்ணலாம் என்று சொல்லியிருக்கிறார். அப்போது விஜயின் கதாபாத்திரத்திரம் என்ன என்பதை விளக்கமாக கேட்ட விஜய்,
அந்தப் படத்தில் 6 வயது குழந்தைக்கு அப்பாவாக வருகிறீர்கள் என்று சொல்லியிருக்கிறார் அமீர். இது நடந்து பத்து வருடத்திற்கும் மேலாக இருக்குமாம். இப்போது அதைப் பற்றி ரசிகர்கள் அமீரிடம் ‘மீண்டும் கண்ணபிரான்’ படம் எடுக்க திட்டமிட்டிருக்கிறீர்களா?என்று கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அமீர் ‘இப்பொழுது விஜய் இருக்கிற மார்கெட்டே வேற, அவர் படம் என்றால் கண்டிப்பாக ஓப்பனிங் சாங் இருக்கனும், ரொமாண்டிங் சீன் இருக்கனும், ஃபைட் சீன் இருக்கனும், மாஸான சீன் என இப்படி எல்லாம் இருக்கனும், அதை என்னால் இப்பொழுது பண்ண முடியாது’ என்றும்,
‘மேலும் அன்றைக்கே 6 வயது குழந்தைக்கு அப்பா என்று சொன்னதும் மிகவும் யோசித்தார் விஜய், அப்பாவாக நானா? என்று தயக்கமாக கேட்டார். அப்பொழுதே இது நடக்காது என தெரியும், ஆனால் அதே 6 வயது குழந்தைக்கு அப்பாவாக ‘தெறி’ படத்தில் நடித்தார், இது தான் காலக்கொடுமை என்று சொல்வார்கள்’ என்றும்,
காலம் எப்படியும் ஒரு மனுஷனை மாத்திடும் என்றும் கூறினார். மேலும் விஜயை வைத்து இனிமேல் என்னால படம் எடுக்க முடியாது என்றும் திட்டவட்டமாக கூறுவது போல் அந்த பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்தார் அமீர்.
இதையும் படிங்க : சிவாஜி-எம்ஜிஆர், ரஜினி-கமல்,விஜய்-அஜித் இவர்கள் வரிசையில் இணையும் அடுத்த கூட்டணி!.. முடிவு பண்ணிட்டாங்கய்யா?..