
Cinema News
சும்மா இருக்குற பிரச்சினையை ஊதி கெடுக்காத…! அஜித்திற்கு எதிரான டையலாக்கை மாற்ற சொல்லிய விஜய்…!
நினைத்தேன் வந்தாய், உள்ளத்தை அள்ளித்தா, பிரியமானவளே, மேட்டுக்குடி போன்ற கமெர்ஷியல் படங்களாக கொடுத்து பெரிய அளவில் ஹிட் கொடுத்தவர் இயக்குனர் செல்வ பாரதி. இவர் நடிகர் மணிவண்ணனின் அசிஸ்டண்டாக பணியாற்றியவர். கிட்டத்தட்ட அனைத்து முன்னனி நடிகர்களுடன் சேர்ந்து பல படங்களை இயக்கியுள்ளார்.
ஆனால் நடிகர் அஜித்துடன் ஒரு படம் கூட இதுவரை அவர் பண்ணியதில்லையாம். நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த ‘ஹலோ’ திரைப்படத்தில் நடிகர் அஜித்து தான் முதலில் நடிக்க வேண்டியதாம். ஆனால் அஜித் கேட்ட பணத்தை தயாரிப்பாளரால் கொடுக்க முடியாததால் அஜித் அந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம். அந்த சமயத்தில் விஜயுடன் சேர்ந்து தொடர்ச்சியாக படங்களை இயக்கி கொண்டிருந்தாராம். இவர் எடுத்த விஜய் படங்கள் எல்லாம் ஹிட்.
ஹலோ படத்தில் விலகியதில் இருந்து ரசிகர்களுக்குள் சண்டை ஏற்பட்டுவிட்டதாம். அவர் விஜய் இயக்குனர். அதனால் விஜய்க்கு மட்டும் தான் படம் தயாரிப்பார் என்றெல்லாம் வதந்திகள் வந்ததாம்.ஆனால் விஜயும் அஜித்தும் அவர்களுக்குள் சகஜமாக பேசிக் கொள்வார்களாம். ஒரு சமயம் விஜய்க்கு வசீகரா என்ற படத்தை எடுத்து கொண்டிருக்கும் சமயத்தில் அஜித் வில்லன் படத்தில் நடித்துக் கொண்டிருந்தாராம்.
உடனே இயக்குனர் இதை மனதில் வைத்து வசீகரா படத்திற்காக ஒரு வசனம் எழுதினாராம். இந்த வசனத்திற்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்து எழுதினாராம். ”உன் பேருதான் வில்லன், ஆனால் நான் பிறக்கும்போதே வில்லன் டா” என்ற வசனத்தை எழுதி விஜயிடம் போய் காட்ட இதை பார்த்த விஜய் “ நீ சும்மா இருக்கிற பிரச்சினையை ஊதி கெடுத்துருவா போல, ஒதை படுவா, வேண்டாத பிரச்சினைகள் எல்லாம் வரும் “ என்று கூறி அந்த வசனத்தை மாற்றி விட்டாராம். இதை ஒரு பேட்டியில் இயக்குனர் செல்வபாரதி கூறினார்.