என் வழி தனிவழி இல்லை… அவங்களோடதான் நானும்… யார சொல்றீங்க தளபதி?
ரீமேக் படங்கள் பண்ணுவதில்லை என்கிற தனது கொள்கையைத் தளர்த்திக் கொண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கிய முதல் படம் நண்பன். அமீர்கான் நடிப்பில் 2009-ல் வெளியான 3 இடியட்ஸ் படத்தைத் தழுவி தமிழில் எடுக்கப்பட்ட நண்பன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் விஜய் நடிக்க, அவரின் நண்பர்களாக ஜீவாவும் ஸ்ரீகாந்தும் நடித்திருந்தனர்.
2012 பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை படம் பெற்றது. ஜெமினி ஃப்லிம் சர்க்யூட் நிறுவனம் 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் உரிமையைப் பெற்றவுடன் தரணி, விஷ்ணுவர்தன் மற்றும் ஷங்கர் ஆகியோரிடம் இயக்குவதற்காக பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ஷங்கர் இயக்குவதாக முடிவானது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆரிடம் உதவி கேட்காத ஒரே நடிகர்!.. ரஜினி இறங்கி செய்த அந்த காரியம்!…
அதேபோல், தெலுங்கு நடிகர்களான மகேஷ் பாபு மற்றும் ராம்சரணிடமும் பேசப்பட்டது. குறிப்பாக தெலுங்கு இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ராம்சரண், ஷங்கர் இந்தப் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கவில்லை. அதனாலேயே அந்த வாய்ப்பை மறுத்ததாகச் சொல்லியிருப்பார். அதேபோல், நண்பர்கள் கேரக்டரில் நடிக்க சிம்புவிடமும் பேசப்பட்டது.
இதையும் படிங்க: இதெல்லாம் ஒரு காமெடியா?!.. எஸ்.கே. படத்தை கலாய்த்த உதயநிதி!. ஆனா நடந்ததே வேற!…
ஆனால், அந்த கேரக்டர் தனக்கு ஒத்துவராது என்று சொல்லி சிம்பு விலகியிருக்கிறார். அதேபோல், இலியானா ரோலுக்கு முதலில் பேசப்பட்டவர் அசின். இப்படி பெரிய பெரிய நட்சத்திரங்களிடம் பேசப்பட்டு, பின்னர் படத்தில் நடித்தவர்கள் முடிவு செய்யப்பட்டனர். படம் வெளியாகி சத்யராஜ் நடித்திருந்த வைரஸ் கேரக்டர் பரவலாகப் பாராட்டுப் பெற்றது.
நண்பன் இசை வெளியீட்டு விழா கோவையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் நடைபெற்றது. அப்போது, 30 அடி உயர கூண்டில் இருந்து விஜய் இறங்கி வரும்படி செட் போட்டிருந்தார்களாம். ஆனால், சக நடிகர்களான ஜீவாவுக்கும், ஸ்ரீகாந்துக்கும் முக்கியத்துவம் தரணும். 'நாங்க மூணு பேரும் ஒண்ணுதான். எனக்குன்னு தனி வழி எல்லாம் வேண்டாம். ஜீவா, ஸ்ரீகாந்த் எந்த வழியா மேடைக்கு வர்றாங்களோ, அதே வழியாவே நானும் வர்றேன்’ என்று சொல்லி சிம்பிளாக விஜய் மேடையேறினார்.