தொடர்ந்து காதல் படங்களை தவிர்த்து வரும் நடிகர் விஜய்...! பின்னனியில் இருக்கும் காரணம்...
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தை வம்சி இயக்க தமன் இசையமைக்கிறார்.
இந்த படம் குடும்ப கதையை மையமாக வைத்து உருவாகும் ஆக்ஷன் கலந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரொம்ப நாளைக்கு பிறகு விஜயின் நடிப்பில் இப்படி ஓரு படம் வருவது பெருத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்கள் : இரண்டு மெகா ஹிட் படங்களை தவறவிட்ட விஜய், அஜித்….தட்டி தூக்கிய விக்ரம்….
ஆரம்ப காலங்களில் காதல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக பூவே உனக்காக, லவ் டுடே, காதலுக்கு மரியாதை போன்ற படங்கள் எல்லாம் விஜயின் காதலை தத்ரூபமாக எடுத்துரைக்கும் படமாக அமைந்தன. ஆனால் போக போக முழுவதும் ஆக்ஷன் கலந்த படங்களாகவே நடிக்க ஆரம்பித்து விட்டார்.
மீண்டும் காதலுக்கு மரியாதை விஜயை பார்க்க மாட்டோமா என ஏங்குகின்றனர் ரசிகர்கள். ஆனால் விஜய் மீண்டும் அந்த மாதிரி கதைகளில் இனி நடித்தால் ரசிகர்களே ஏற்க மாட்டார்கள், மறுபடியும் ரோஜாவை கையில் எடுத்து சுற்றினால் சிரிக்க மாட்டார்களா என நினைக்கிறாரோ? இது கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்று கோடம்பாக்கத்தில் தகவல்கள் வெளிவருகின்றன.