Connect with us

Cinema News

ஹீரோயின் மூஞ்சி நல்லா அழகா இருக்கு.. ஆனா பேரு தெரியல.. மேடையில் உளறிய பீஸ்ட் முக்கிய நடிகர்…

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் மிக முக்கிய காமெடி கதாபாத்திரத்தில் நடித்தவர் விடிவி கணேஷ். விண்ணத்தாண்டி வருவாயா படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இந்த விடிவி கணேஷ்.

அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும், சில காலம் தமிழ் சினிமாவில் பார்க்காமல் இருந்த ரசிகர்களுக்கு பீஸ்ட் திரைப்படம் மூலம் மீண்டும் தனது முகத்தை பதியவைத்துள்ளார்

இவர் அண்மையில் பிரிதிவிராஜ் நடித்துள்ள கடுவா படத்தின் தமிழ் பதிப்பு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இவருடன் ஆர்யா, ஜீவா, பைனான்சியர் அன்புசெழியன் ஆகிய பலர் கலந்து கொண்டார்.

இதையும் படியுங்களேன் – நானும் தப்பான படங்களில் நடித்து இருக்கேன்.. அதிலென்ன தப்பு.?! ஷாக் கொடுத்த பிரியா பவானி சங்கர்.!

அதில் பேசிய விடிவி கணேஷ் மிகவும் கலகலப்பாக வெளிப்படையாக பேசினார். நடிகர் பிரிதிவிராஜ் மிகவும் திறமையான நடிகர். அதே போல இயக்குனர் மிகவும் அனுபவம் வாய்ந்த இயக்குனர். ஹீரோயின் பேர் தெரியல ஆனா மூஞ்சி நல்லாருக்கு. அதுக்கப்புறம் கேட்டு தெரிஞ்சிகிட்டேன். என பேசிவிட்டார். மேடையில் இருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்.

கடுவா படத்தை ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ளார். இவர் அஜித்தின் ஜனா, எல்லாம் அவன் செயல் உள்ளிட்ட தமிழ் படங்களையும் இயக்கியுள்ளார். நாயகன் பிரிதிவிராஜ், நாயகி சம்யுக்தா மேனன் இவர் தற்போது தனுஷுடன் இணைந்து வாத்தி படத்தில் நடித்து வருகிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top