Categories: Cinema History latest news

என்னது விஜய்க்கு இப்போதான் தைரியம் வந்திருக்கா.?! பழைய ரெக்கார்ட் எடுத்து பாருங்க…

தளபதி விஜய் மீது சில ஆண்டுகளாக ஒரு குற்றசாட்டு எழுந்து வருகிறது. அதாவது, அவர் தன்னுடைய படம் பெரிய வெற்றிபெற வேண்டும். வசூல் சாதனைகள் புரிய வேண்டும் என்பதற்காக சோலோ ரிலீஸ் செய்கிறார். அதாவது எந்த படத்துடனும் மோதாமல், தனியாக வெளியிடுகிறார் என்று.

Also Read

அதற்கு பதிலளிக்கும் விதமாக தற்போது உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. அதற்கு அடுத்த நாள், இந்தியா முழுவதும் பான் இந்திய பிரமாண்ட திரைப்படமாக கே.ஜி.எப்-2 ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

ஆனால், இதற்கு முன்னரே, தலைப்பதில் விஜய், இளையதளபதி விஜயாக வளர்ந்து வந்த போதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தனது படத்தை மோதவிட்டுள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா.? 1995ஆம் ஆண்டு ரஜினிகாந்த் – இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் வெளியான மெகா ஹிட் திரைப்படமான முத்து படத்துடன் விஜய் சந்திரலேகா எனும் படத்தை களமிறங்கினார். இந்த படத்தில் தான் பிக் பாஸ் வத்திக்குச்சி வனிதா விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். படம் தோல்வியை தழுவியது.

இதையும் படியுங்களேன் – அட்டர் பிளாப்.! இப்போ அடிதூள் ஹிட்.! வயித்தெரிச்சலை கிளப்பாதீங்க.! லிஸ்ட் ரெம்ப பெருசு.!

அடுத்ததாக 2005ஆம் ஆண்டு மீண்டும் சூப்பர் ஸ்டார் உடன் தனது படத்தை மோத விட்டுள்ளார் விஜய். ரஜினி நடித்த சந்திரமுகி படத்துடன் சச்சின் படத்தை களமிறக்கினார். இதில் சந்திரமுகி மெகா ஹிட் என்றால், சச்சின் சூப்பர் ஹிட்டனது குறிப்பிடத்தக்கது.

இது தவிர விஜய், தனது சமகால போட்டியாளர்களான அஜித் மற்றும் சூர்யாவுடன் அடிக்கடி தனது பாதை களமிறக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
Manikandan