தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் வரிசையில் ரஜினிக்கு அடுத்த படியாக ரசிகர்கள் மனதில் நிற்பவர் நடிகர் விஜய். ரஜினியை போன்றே அதிக ரசிகர்கள் பட்டாளத்தை உள்ளடக்கியவர்.
ரஜினியின் அந்த மாஸ், ஸ்டைல் என எல்லாவற்றையும் விஜயின் உருவத்தில் இப்பொழுது ரசிகர்கள் பார்க்க தொடங்கி விட்டனர். இப்படி பெரிய மாஸாக நடிகராக விஜய் வர காரணமாக இருந்த படம் வெங்கடேஷ் இயக்கத்தில் வெளிவந்த ‘பகவதி’ திரைப்படம்.
இதையும் படிங்க : சிவாஜியிடம் வாலி சொன்ன அந்த ஒரு வார்த்தை… “உடனே ஃப்ரண்டு ஆயிட்டாரு”… இவ்வளவு ஓப்பனாவா சொல்றது…
அதுவரை காதல் படங்களில் நடித்து வந்த விஜய் முதன் முதலில் ஒர் கமெர்ஷியல் படத்தில் நடிக்கிறார் என்றால் அது பகவதி படம் தான். அதுவும் இந்த படம் முதலில் ரஜினிக்காக எழுதிய படமாம். அவரை மனதில் வைத்து தான் கதை, வசனம் எல்லாவற்றையும் எழுதியிருக்கிறார் வெங்கடேஷ்.
அதன் பின் ரஜினியை நெருங்கமுடியாமல் விஜயிடம் போயிருக்கிறார். விஜயும் இந்த கதையை கேட்டு முதலில் பயந்தாராம். முழு ஆக்ஷன் படமாக இருக்கிறது.சரி வருமா என கேட்டாராம். வெங்கடேஷ் முழு விபரத்தையும் சொல்ல அதை புரிந்து கொண்டு விஜய் நடிக்க சம்மதித்திருக்கிறார். தீபாவளி அன்று படம் ரிலீஸாக கூடவே
ரமணா, வில்லன் ஆகிய படங்களும் பகவதியோடு மோதியிருக்கிறது. ஆனால் வெளியான மூன்று படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன என்பது தான் உண்மை.
Power Star: தமிழ்…
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…