விஜயோட பயோகிராபி படமாக்கப் போறாங்களா...? யார் எடுக்க போறாங்கனு தெரியுமா...?
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தளபதி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றார்.
இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தையடுத்து லோகேஷ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படி படிபடியாக பல வெற்றி தோல்விகளை கடந்து இன்று தமிழ் சினிமாவே அண்ணாந்து பார்க்கும் உன்னத நட்சத்திரமாக வளர்ந்து நிற்கிறார்.
ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஏகப்பட்ட படங்களில் நடித்து மாஸ் ஹீரோவாக ஜொலித்து வருகிறார். பெரும்பாலான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் விஜய். இவரின் படங்கள் ரிலீஸ் ரசிகர்களுக்கு ஒரு பண்டிகை காலங்களாகவே மாறிவிடும். அந்த அளவிற்கு ஒட்டு மொத்த அன்பை பெற்றவர் நடிகர் விஜய்.
இந்த நிலையில் யு-டியூப்பில் பிரபலமாக இருக்கும் குழந்தையும் சமீபத்தில் நயன் தாரா நடிப்பில் வெளியான o2 படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமுமான ரித்து விஜய் பிறந்த நாளின் போது விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் உங்களுடைய பயோகிராபியை நான் தான் எடுப்பேன் என்றும் கூறியுள்ளார். எதிர்கால இயக்குனராக ஜொலிக்கிறார் ரித்து.