விஜயின் பிறந்த நாள் பரிசு..! சர்ப்ரைஸ் பண்ண ராக் ஸ்டார்..!
சினிமாவையே தன் இசையால் கட்டிப் போட்டு சாம்ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கும் பிரபலம் ராக் ஸ்டார் நம்ம அனிருத். மிக சிறு வயதிலயே இந்த அளவிற்கு பெருமையை பெற்றவர் இவர் மட்டுமே. இவரின் இசையில் வராத படங்கள் திரைக்கு வருவதே மிகக்குறைவு.
நடிகர், நடிகைகளை தேர்வு செய்கிறார்களோ இல்லையோ அனிருத் இல்லைன்னா படம் இல்லை என்ற நிலைமைக்கு ஆளாகி இருக்கிறது சினிமா. கடந்த வருடத்தில் மட்டும் தொடர்ச்சியாக ரஜினி, விஜய், அஜித் என மாஸான ஹீரோக்களுக்கு இசையமைத்து தன் பெருமையை நிலை நாட்டியுள்ளார்.
இந்த நிலையில் இன்று விஜயின் 48 வது பிறந்த நாளை தமிழ் சினிமாவே சேர்ந்து கொண்டாடி வருகிறது. விஜய் தற்போது வாரிசு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். சென்னை ஐதராபாத் என இரு இடங்களில் படப்பிடிப்பு நடக்கும் நிலையில் பிறந்த நாள் பரிசாக அனிருத் ஒரு சர்ப்ரைஸ் செய்திருக்கிறார்.
அவரின் இசையில் நெல்சன், டாக்டர் பட புகழ் ஜான்சரோவ் ஆகியோருடன் இணைந்து தளபதிக்காக ஒரு பாடலை தயார் செய்து பாடியுள்ளனர். அந்த பாடல் தான் இப்போது இன்ஸ்டா . ட்விட்டர் என சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ :https://www.instagram.com/reel/CfGDWOUAcQw/?utm_source=ig_web_copy_link