Actor Vijay: சில தினங்களுக்கு முன் விஜய் சாய்பாபா கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த புகைப்படம் ஒன்று வைரலானது. அதற்கு முன்புதான் அவர் கோட் படத்திற்காக துபாய் சென்ற வீடியோவும் வைரலானது. அதனால் அந்த புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது? எந்த ஊர் சாய்பாபா கோயில் என்றெல்லாம் ரசிகர்கள் புலம்பி வந்தார்கள். இப்போது அதன் உண்மைத்தன்மை என்ன என தெரியவந்திருக்கிறது.
உண்மையிலேயே அந்த சாய்பாபா கோயில் கொரட்டூரில் உள்ள ஒரு ஏரியாவில் அமைந்த சாய்பாபா கோயிலாம். அதுவும் விஜய் தன் தாய் ஷோபாவுக்காக கட்டிய கோயில் என்ற ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. கொரட்டூரில் தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலப்பரப்பில் விஜய் இந்த கோயிலை கட்டியிருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதிதான் இந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றதாம்.
இதையும் படிங்க: ‘சொர்க்கமே என்றாலும்’ ஸ்டைலில் ரைடு போகும் விஜய்! ‘கோட்’ பட செட்டில் இருந்து வெளியான வீடியோ
அந்த கும்பாபிஷேகத்தில் தாய் ஷோபா மற்றும் புஸ்ஸீ ஆனந்த் ஆகிய இருவரும் கலந்து கொண்ட வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. கோயில் கட்டுமானப் பணி முடியும் வரை சென்னையில் இருக்கும் போதெல்லாம் விஜய் அங்கு சென்று பணிகள் எப்படி நடந்து கொண்டிருக்கின்றன் என்பதை அடிக்கடி போய் பார்க்கும் வழக்கத்தை கொண்டிருந்தாராம்.
இப்போது இந்த சாய்பாபா கோயில் விஜய் கட்டியது என தெரியவந்ததும் ரசிகர்களுக்கு ஒரே அதிர்ச்சி. லியோ மேடையில் முதன் முதலாக அழுத்தம் திருத்தமாக விஜய் என்ற தன் பெயரை ஜோசப் விஜய் என்று சொன்னதில் இருந்தே பல பேருக்கு கொஞ்சம் அதிருப்தியாக இருந்தது. இப்படி மதத்தை முன்னிலை படுத்தி கூறுகிறாரே என்றெல்லாம் கூறி வந்தார்கள்.
இதையும் படிங்க: கமல் நடித்த வெள்ளி விழா படங்களின் லிஸ்ட்!.. வசூல் ராஜாவாக கலக்கிய உலக நாயகன்…
ஆனால் திடீரென சாய்பாபா கோயிலில் விஜய் தரிசனம் என்று ஒரு புகைப்படம் வெளியானதும் இவர் மதத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்று மாறியது. ஆனால் அதற்கு பின்னனியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. லாரன்ஸ் தன் தாய் உருவத்திலேயே ஒரு கோயிலை கட்டினார். அதன் பின் தன் தாய் ஷோபாவுக்கு விஜய் சாய்பாபா கோயிலை கட்டியிருக்கிறார்.
சிவகார்த்திகேயனைப் பொருத்த…
கங்குவா படத்தின்…
தனுஷ், நயன்தாரா…
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…