
Cinema News
அஜித்துக்கு வந்த எச்சரிக்கை.! பதறி போய் அதிரடி நடவடிக்கை எடுத்த விஜய்.!
தளபதி விஜய் பீஸ்ட் படத்தின் ரிசல்ட்டை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் தமிழ் தெலுங்கு என இருமொழி படமாக உருவாகி வருகிறது.
இப்பட இயக்குனர் தெலுங்கு, தயாரிப்பாளர் தெலுங்கு, இசையமைக்கும் தமன் தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் என அனைத்தும் தெலுங்கு என இருப்பதால், தமிழ் பட தொழிலாளர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய் விடுமோ என நினைத்திற்கும் வேளையில் ஓர் மகிழ்ச்சி செய்தி விஜயிடம் இருந்து வந்துள்ளது.
அதாவது, தமிழ் சினிமா தொழிலாளர் சங்கமான ஃபெப்சி தொழிலாளர்களை தளபதி 66 பட வேலைகளுக்கு அழைத்துள்ளதாம் படக்குழு. இதன் பின்னணி என்ன வாக இருக்கும் போது விசாரிக்கையில் ஓர் புதிய செய்தி கிடைத்துள்ளதாம்.
இதையும் படியுங்களேன் – ரஜினி இடத்தை எட்டி பிடித்த அஜித்.! விஜய் கிட்ட நெருங்க முடியாது.! வெளியான பிரமாண்ட சர்வே..,
அதாவது, அண்மையில் ஃபெப்சி தொழிற்சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி ஒரு பேட்டியில் கூறுகையில், அஜித் தொடர்ந்து தனது படப்பிடிப்பை ஹைதிராபாத்தில் தான் நடத்தி வருகிறார் இதனால், ஃபெப்சி தொழிலாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. இதனை அஜித் அடுத்த படங்களில் மாற்றிக்கொள்ள வேண்டும் என கூறுகின்றனர்.
அஜித்திற்கு வந்த இந்த செய்தியை கேட்ட பிறகு தான் விஜய் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. எது எப்படியோ தமிழ் சினிமா தொழிலாளர்களுக்கு சரியாக வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டால் நல்லது தான்.