அஜித்தை உயர்வாக பேசிய பத்திரிக்கையாளர்… விஜய் ஆஃபிஸில் இருந்து பறந்து வந்த ஃபோன்… இப்படியெல்லாம் நடந்திருக்கா??
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், ஆகியோரை தொடர்ந்து விஜய்-அஜித் ஆகியோர்தான் போட்டி நடிகர்களாக திகழ்ந்து வருகிறார்கள். இவர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளிவந்தால் அன்றைக்கு திரையரங்கமே திருவிழா போல் காட்சித் தரும். சில நேரங்களில் அடிதடி சண்டைகளும் கூட நிகழக்கூடும்.
இதனை தொடர்ந்து விஜய்யின் “வாரிசு” திரைப்படமும் அஜித்தின் “துணிவு” திரைப்படமும் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு 11 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் வெறித்தனத்தோடு இத்திரைப்படங்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒரே நாளில் மோதவுள்ளதால் ரசிகர்களுக்கு இந்த பொங்கல் மிகப்பெரிய விருந்தாக அமையவுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி, ஒரு முறை அஜித்தை உயர்த்தி பேசியதாக எண்ணிக்கொண்டு பத்திரிக்கையாளர்களுக்கு நேரடியாக தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசிய ஒரு நிகழ்வை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
“எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல் ஆகியோரை தொடர்ந்து இப்போது விஜய்-அஜித் என்கிறார்கள். தொடக்கத்தில் பத்திரிக்கைகளில் விஜய்-அஜித் என்பதற்கு பதிலாக அஜித்-விஜய் என்று எழுதினால் விஜய்யிடம் இருந்து தொலைப்பேசியில் அழைப்பு வரும்.
‘என்ன இப்படி எழுதிருக்கீங்க. இனிமே அஜித்-விஜய்ன்னு எழுதாம, விஜய்-அஜித்ன்னு எழுதுங்க’ என தனது பெயர் முதலில் வருமாறு பார்த்துக்கொள்வார். இப்படித்தான் ஒரு முறை வலைப்பேச்சு வீடியோவில் அஜித்-விஜய் என்று கூறிவிட்டோம். உடனே விஜய் தரப்பில் இருந்து அழைப்பு வந்தது. ‘விஜய் பெயரை முதலில் சொல்லுங்கள்’ என்று வேண்டுகோள் வைத்தார்கள்” என கூறியிருந்தார்.
இதையும் படிங்க: வேற வழியே இல்லாம கடமைக்குன்னு எடுத்த படம்… ஆனா செம ஹிட்… எப்படிப்பா??
மேலும் பேசிய அவர் “அதாவது எம்.ஜி.ஆர், ரஜினி போன்ற மாஸ் நடிகர்களின் வரிசையில் தன்னுடைய பெயர் இடம்பெறவேண்டும் என விஜய் நினைக்கிறார். இரண்டாவதாக உச்சரிக்கப்படும் சிவாஜி, கமல் போன்ற பெயர்கள் எம்.ஜி.ஆர், ரஜினி போன்ற மாஸ் நடிகர்களை விட ஒரு படி கம்மியாக பார்க்கப்படுவதன் காரணமாகவே விஜய் தன்னுடைய பெயர் முதல் பெயராக இருக்கவேண்டும் என நினைக்கிறார்” என்று அப்பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.