விஜய் நடிப்பில் உருவாகி வரும் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கத்தில் காஷ்மீர் பகுதியில் 50 நாட்களுக்கு மேல் நடைபெற்று வந்தது. அதன் பின் தற்போது சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. வருகிற அக்டோபர் மாதம் இத்திரைப்படம் வெளியாக உள்ளதால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
“லியோ” திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். இவர்களுடன் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த, மேத்யூ, மன்சூர் அலிகான் போன்ற பலரும் நடித்து வருகின்றனர்.
இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருவதால் இத்திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு இயக்கிய “விக்ரம்” திரைப்படம் ரூ.400 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்தது. ஆதலால் “லியோ” திரைப்படமும் மாஸ் திரைப்படமாக அமையும் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வந்தபோது அங்கே நடைபெற்ற ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம். ஒரு நாள் காலை 9 மணிக்கு படப்பிடிப்பு தொடங்கும் என கூறியிருக்கிறார். ஆனால் அன்றைய நாள் விஜய் 8 மணிக்கே அந்த குளிரிலும் ஜெர்க்கின் போட்டுக்கொண்டு படப்பிடிப்பு தளத்திற்கு போய்விட்டாராம். இதனை கேள்விப்பட்ட படக்குழுவினர் உடனே படப்பிடிப்புத் தளத்திற்கு சென்றிருக்கின்றனர்.
அங்கே ஒரு நாற்காலியில் இயற்கை காட்சியை ரசித்துக்கொண்டு அமர்ந்திருந்தாராம் விஜய். அப்போது லோகேஷ் கனகராஜ் அவர் அருகில் சென்று, “என்ன சார் இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க?” என கேட்க அதற்கு விஜய், “எனக்கு நேரம் கடைப்பிடிக்கிறது ரொம்ப முக்கியமான விஷயம் பிரதர்” என கூறியிருக்கிறார். “அதற்காக இவ்வளவு சீக்கிரமாகவா இந்த குளிருக்குள் வருவது?” என லோகேஷ் கேட்க அதற்கு விஜய், “நீங்க எப்போ ஷூட்டிங் ஆரம்பிக்கனும்ன்னாலும் ஆரம்பிங்க. என்னோட டைம் இதுதான். எனக்காக நீங்க பதட்டப்பட வேண்டாம்” என்று கூறினாராம். இதனை கேட்டதும் படக்குழுவினர் நெகிழ்ந்து போனார்களாம்.
இதையும் படிங்க: அந்த படம் மாதிரி ஒரு கதை சொல்லுங்க- விஜய் சொன்ன அந்த வார்த்தையால் கடுப்பான கௌதம் மேனன்…
Vikram: தமிழ் சினிமாவில்…
கடந்த 14…
Vijay tv:…
Rj Balaji:…
விமர்சனம் செய்வது…