கோட் படத்தில் குட்டி விஜய் இந்த பிரபலத்தின் மகனா? விஜய் என்ன கேட்டார் தெரியுமா?
Goat Movie: விஜய் நடிப்பில் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் எல்லாம் முடிய செப்டம்பர் 5ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது.
படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களை எதிர்பார்த்த அளவு திருப்திப்படுத்த வில்லை என்றாலும் ட்ரைலர் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது இந்த கோட் திரைப்படம். படத்தில் விஜய் டீ ஏஜிங் முறையில் ஒரு கேரக்டரில் வர இருக்கிறார்.
இதையும் படிங்க: குட் பேட் அக்லி படத்திலும் அந்த நடிகை!.. இவர் அஜித்தே விடவே மாட்டார் போல!….
இதில் சிறு வயது விஜயாக நடித்திருக்கும் பையனின் பெயர் அகில். இவர் யூடியூப்பில் ரவுடி பேபி சேனலில் வரு ஆலியாவின் தம்பி. ஒரு பக்கம் ஆலியா சேனல் மூலம் பிரபலமான நிலையில் அகில் படங்களில் நடித்து பிரபலமாகி வருகின்றார். ரவுடி பேபி சேனலில் ஆலியாவின் தந்தையான நடிக்கும் காமெடி நடிகர் ராஜாதான் உண்மையான தந்தை என்று தான் நினைத்துக் கொண்டிருந்தோம்
அதனால் அகிலின் தந்தையும் அவர்தான் என பலபேர் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் ராஜா அந்த காமெடிக்காக ஆலியாவின் தந்தையாக நடிக்க வந்தவர்தானாம். ஆனால் ரவுடிபேபியில் ஆலியாவின் அம்மாவாக நடித்துக் கொண்டிருப்பவர் உண்மையான அம்மாதானாம்.
இதையும் படிங்க: வேட்டையன் கதை வேறலெவல்!.. ஆனா ரஜினிக்கு செட் ஆகுமா?!.. ஒரு அலசல்!…
இந்த நிலையில் அகிலின் அம்மா ஒரு பேட்டியில் தன் மகன் கோட் படத்தில் விஜய்க்கு மகனாக நடிப்பதை பற்றி பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். அப்போது விஜய் அகிலின் அம்மாவிடம் ‘எப்படி இவன சமாளிக்கீறீங்க’ என கேட்டாராம். அந்தளவுக்கு வாலுத்தனம் பண்ணுவாராம் குட்டி விஜயாகிய அகில்.
விஜய் முன்னாடி அகிலை திட்டமாட்டாராம் அவருடைய அம்மா. அதையும் மீறி திட்டினால் ஏன் திட்டுறீங்க? சின்னப் பையன் தானே என்று விஜய் சொல்வாராம். மேலும் செட்டில் விஜய்க்கு சில கார் கேம்கள் எல்லாம் அகில் சொல்லிக் கொடுப்பாராம்.
இதையும் படிங்க: ப்ப்பா!.. செம யங்கா இருக்காரே தளபதி விஜய்!. கோட் பட போட்டோக்களை பகிர்ந்த தயாரிப்பாளர்..