முறுக்கு மீசைக்காரர்.. வாரிசு சக்சஸ் பார்ட்டியை கொண்டாடிய விஜய்!.. வித்தியாசமான கெட்டப்பில் வைரலாகும் புகைப்படங்கள்!...

vijay
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாரிசு படம் ஓரளவு விமர்சனங்களை பெற்ற போதிலும் இன்னும் வெற்றிகரமாக திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது.

vijay
இதனையடுத்து விஜய் அடுத்ததாக லோகேஷுடன் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக மாறிவிட்டார். அந்த படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகி விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. மேலும் இயக்குனர் மிஷ்கினுடனான சண்டைக்காட்சிகள் விஜயுடன் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தது.
இதையும் படிங்க : தீ விபத்தில் வீட்டை இழந்த மக்கள்… கண்ணதாசன் ஆஃபீஸ்க்கு வந்து கதறி அழுத சம்பவம்… கவியரசர் என்ன செய்தார் தெரியுமா??
மேலும் வாரிசு படத்தில் ஹோம்லியாக சார்மிங்கான முகத்தோற்றத்தில் மிகவும் க்யூட்டாக இருந்தார். அதே போல லோகேஷ் படத்தில் என்ன மாதிரியான தோற்றம் என ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருந்தனர்.

vijay
இந்த நிலையில் வாரிசு படக்குழு சமீபத்தில் தங்கள் வாரிசு படத்தின் சக்ஸஸ் பார்ட்டியை கொண்டாடியிருக்கிறது. அப்போது விஜய் உட்பட அனைவரும் கலந்து கொண்டிருக்கின்றனர். கேக் வெட்டி பார்ட்டியை மகிழ்ச்சியாக கொண்டாடியிருக்கின்றனர். அப்போது விஜய் வம்சிக்கு கேக் ஊட்டுவது மாதிரியான புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது.

vijay
அந்த புகைப்படத்தில் விஜய் சற்று முறுக்கு மீசை வைத்திருப்பது போன்று இருக்கிறது. ஒரு வேளை இது தளபதி 67 படத்திற்கான கெட்டப்பாகக் கூட இருக்கலாம் என ரசிகர்கள் கருதுகின்றனர்.