Connect with us

Cinema News

இருக்க இடத்தை விட்ர கூடாது!… முடிவில் இருந்து பின்வாங்கிய விஜய்.. இதுதான் புது திட்டமாம்!…

Vijay: நடிகர் விஜய் தன்னுடைய கேரியரில் அடுத்த கட்டமாக அரசியலில் இறங்க இருப்பதாக பல மாதங்களாகவே கிசுகிசுக்கப்பட்டது. தற்போது அதன் அடுத்தக்கட்டமும் நடந்துவிட்டதாம். அதுகுறித்து சில ஆச்சரிய தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது.

எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் என்ற அடையாளத்துடன் கோலிவுட்டுக்கு வந்தவர் நடிகர் விஜய். இவரின் நாளைய தீர்ப்பு படம் மிகவும் மோசமாகவே விமர்சிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இவரை நடிகராக ஏத்துக்கவே முடியாது என்ற நெகட்டிவ் விமர்சனங்களே அதிகம். இருந்து சந்திரசேகர் தொடரந்து விஜயை வைத்து படம் இயக்கினார்.

இதையும் படிங்க: வில்லன் பில்டப் வெறித்தனமா இருக்கு!.. கங்குவா புதிய போஸ்டர் அப்டேட் இதோ!..

இருந்தும் அவர் இயக்கத்தில் விஜயிற்கு சொல்லும்படியான வெற்றி இல்லை. பின்னர் மற்ற இயக்குனர்களின் கையிற்கு மாறிய விஜய் காதல் மன்னனாகினார். காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு என அவர் கேரியர் கிராப் உச்சம் அடைந்தது. இன்று லியோ அவரை அவரின் வளர்ச்சி அசூரத்தனம் என்றே சொல்லலாம்.

அடுத்த சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார். சினிமா வாழ்க்கையில் உச்சத்தில் இருக்கும் போதே எம்.ஜி.ஆர் மாதிரி அரசியலுக்குள் கால் எடுத்து வைக்க இருக்கிறார். அந்த முடிவு பலருக்கு ஆச்சரியத்தினை கொடுத்தது. அந்த வகையில் நேற்று மக்கள் இயக்கம் கட்சியாக மாற நிர்வாகிகள் ஒப்புதல் அளித்துவிட்டனர்.

இதையும் படிங்க: இது வெறும் டிரெய்லர் தாம்மா…. மெயின் பிக்சரைப் பார்த்துடாதீங்க… நொந்துடுவீங்க..

விரைவில் புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான குழு டெல்லி சென்று கட்சியை பதிவு செய்ய இருக்கின்றனர். இக்கட்சிக்கு தலைவராக விஜய் நியமிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விஜய் கட்சி பணிக்காக சினிமாவில் இரண்டு வருடம் இடைவேளை விடுவார் என்ற தகவலே நீடித்தது.

ஆனால் தற்போது அதில் ஒரு மாற்றத்தினை விஜய் கொண்டு வந்து இருக்கிறாராம். அதாவது புகழின் உச்சியில் இருக்கும் போது இந்த இடைவேளை சரியாக இருக்காது. அதனால் கட்சி பணியுடன் ஒரே நேரத்தில் நடிப்பிலும் கவனம் செலுத்த இருக்கிறாராம். வெளிநாட்டு ஷூட்டிங்கை மட்டும் தவிர்க்கும்படி தன்னுடைய இயக்குனர்களுக்கும் அறிவுறுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: கேன்சர் என்பது தெரியாமலே இறந்த பவதாரிணி!… மகளை காப்பாற்ற கடைசி வரை போராடிய இளையராஜா…

google news
Continue Reading

More in Cinema News

To Top