‘ஜனநாயகன்’ படத்தில் விஜய் கதாபாத்திரத்தின் பெயர்.. சரியா மேட்ச் ஆயிருக்கு ப்ரோ

by Rohini |   ( Updated:2025-05-06 00:44:14  )
vijay 1
X

vijay 1

Jananayagan: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். தற்போது அரசியலிலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். தவெக என்ற பெயரில் தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்து அரசியல் களத்தையே ஆட வைத்திருக்கிறார் விஜய். அதற்கு முக்கிய காரணம் எந்த பால் போட்டாலும் சிக்ஸர்தான் என்பதை போல் அவருடைய பேச்சு இருப்பது. அவருடைய எதிரி யார் என்பதையும் தான் நடத்திய முதல் மாநாட்டிலேயே பகிரங்கமாக தெரிவித்துவிட்டார் விஜய்.

ஒன்றிய அரசையும் பந்தாடி வருகிறார். எப்படியாவது வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்கு ஒரு புது மாற்றத்தை கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறார் விஜய். எடுத்ததும் அரசியலுக்கு வரவில்லை. பல ஆண்டுகளாக அரசியல் ரீதியாக அவரும் சரி அவருடைய படங்களும் சரி பெரும் சிக்கலை எதிர்கொண்டது. அடிப்பட்ட பாம்பு படமெடுக்கும் என்பதை போல் வாங்கிய அடியெல்லாம் திருப்பி கொடுக்க வேண்டும் என்றே அரசியலுக்கு வந்திருக்கிறார்.

தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதுதான் அவருடைய கடைசி படம். அதனால் இந்தப் படத்தின் மீது பெரியளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஜனநாயகன் படம் கண்டிப்பாக ஒரு அரசியல் சார்ந்த படமாக இருக்கும் என்றும் அரசியல் வசனங்கள் இருக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்தப் படத்திற்கு அனிருத்தான் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். சமீபத்தில்தான் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் சென்றிருந்தார் விஜய். போகும் வழியில் மதுரையில் விஜயை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அதுவே பெரிய அளவில் ரோடு ஷோ நடத்திய மாதிரி இருந்தது.

#image_title

இந்த நிலையில் ஜனநாயகன் படத்தில் விஜய் கதாபாத்திரத்தின் பெயர் பற்றிய ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அந்தப் படத்தின் விஜயின் பெயர் தளபதி வெற்றிக் கொண்டான் (TVK) என இருக்க வாய்ப்பிருக்கிறது என்ற ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. எப்படி இருந்தாலும் பரவாயில்லை. படம் மட்டும் கிரிஞ்சா இல்லாமல் இருந்தால் சரி என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Next Story