சந்தானத்திடம் பெண்குரலில் பேசி ஏமாற்றிய மாஸ் நடிகர்!.. மனுஷன நைட் வரைக்கும் தூங்கவிடாமல் செய்த சம்பவம்!..
தமிழ் சினிமாவில் ஒரு காமெடி நடிகராக வந்து இன்று பல முன்னனி நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் ரேஞ்சில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் சந்தானம். விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய லொள்ளு சபா மூலம் மக்களிடம் பரீட்சையமானவர் தான் சந்தானம்.
அதன் மூலம் கிடைத்த புகழால் வெள்ளித்திரை இவரை வாரி அணைத்துக் கொண்டது. நகைச்சுவை நடிகராக அனைத்து முன்னனி நடிகர்களுக்கும் தோழனாக தோள் கொடுத்தவர் சந்தானம். அஜித், விஜய், சூர்யா, கார்த்தி ஏன் ரஜினி உட்பட அனைவருடனும் சேர்ந்து நடித்தவர்.
இதையும் படிங்க : அஜித்தான் வங்கியை கொள்ளையடிக்கிறார்ன்னு நீங்க நினைக்கலாம்… ஆனா அங்கதான் ஒரு டிவிஸ்ட்… “துணிவு” விமர்சனம் இதோ…
அந்த சமயத்தில் கிடைத்த புகழை ஹீரோவாக நடித்து கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டு வருகிறார் சந்தானம். நடித்தால் ஹீரோ என்ற மன நிலையில் இருக்கும் சந்தானம் ஹீரோவாக நடித்த ஒரு சில படங்கள் மட்டுமே மக்கள் மனதை வென்றுள்ளன. சமீபகாலமாக இவர் நடித்து வெளியான படங்கள் தோல்வியையே தழுவிக் கொண்டு வருகிறது.
இந்த நிலையில் சந்தானம் பற்றிய ஒரு செய்தி வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் சந்தானத்திற்கு ஒரு நாள் மாலை நேரத்தில் தொலைபேசியில் அழைத்து பெண் பேசுவது போல பெண் குரலில் பேசி ப்ராங் செய்தாராம். சந்தானத்தை பற்றி மிகவும் புகழ்ந்தும் பெருமையாகவும் பேச சந்தானம் அவர் பேச்சில் மயங்கி தான் விட்டாராம்.
உண்மை என நம்பிய சந்தானத்திடம் இன்று இரவு தங்களை பார்க்க வருகிறேன் என்றும் கூறினாராம் விஜய். நம்மை தேடி யாரோ ஒரு பெண் வருகிறாள் என்ற ஏக்கத்தில் இரவு 9 , 10, 11, 1 என மணிக்கணக்கில் காத்திருந்து பின் தூங்கிவிட்டாராம் சந்தானம். அதன் பிறகு தான் தெரிந்தது அது விஜய் பேசியது என்று. இந்த தகவலை வலைப்பேச்சு அந்தனன் கூறினார்.